தூத்துக்குடி: Reelsக்காக பைக் சாகசம்; முறித்துப்போன இளைஞரின் கை; வைரலான விழிப்பு...
"அந்தப் படத்தின் இசை பிடிக்கவில்லை என 8 மாதங்களுக்குப் பிறகே ஊதியம் கொடுத்தார்" - ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் 2011-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'ராக்ஸ்டார்'.
இன்றுவரை இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்படத்திற்கான ஊதியம் தனக்கு எட்டு மாதங்கள் தாமதமாகத்தான் கிடைத்தது எனப் பகிர்ந்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
டேராடூனில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் இத்தகவலை அவர் பகிர்ந்திருக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான், "'ராக்ஸ்டார்' படத்தின் தயாரிப்பாளர் 'எனக்கு இந்த இசை பிடிக்கவில்லை' என்று சொல்லிவிட்டார்.
அப்போது என் இசைக் கலைஞர்களுக்கான ஊதியத்தையும், என் பயணச் செலவுகளையும் நானே கொடுத்துக் கொண்டிருந்தேன்.
இந்தப் படத்திற்காக எனக்கு ஒரு பைசா கூட வரவில்லை என்ற விஷயத்தை இம்தியாஸ் அலியிடம் கூட நான் சொல்லவில்லை.
படம் வெளியாகி எட்டு மாதங்களுக்குப் பிறகே எனக்கு ஊதியம் வழங்கப்பட்டது. 'ராக்ஸ்டார்' படத்தில் எங்களுக்குப் பெரிதாகப் பிடிக்காமல் உருவான 'ஷெஹர் மே ஹூன் மெயின் தேரே' பாடல், ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் நான்கு மாதங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது.
'ராக்ஸ்டார்' படத்திற்குப் பிறகு, இம்தியாஸ் அலி என்னிடம் ஒரு வித்தியாசமான ஆச்சரியத்தைக் கொண்டு வந்தார். நான் அவரிடம் 'புதிய படம் செய்கிறீர்களா?' எனக் கேட்டேன்.

அதற்கு அவர், 'சார், இந்தப் படத்தில் ஒரேயொரு பாடல்தான் இருக்கிறது' என்றார். நான் 'பரவாயில்லை. கதை என்ன?' என்று கேட்டேன். பிறகு அந்தப் படத்திற்கு நான் வந்தேன். முதலில் ஒரு பாடல் மட்டுமே அப்படத்திற்குத் திட்டமிட்டிருந்தோம்.
கடைசியில் 14 பாடல்கள் அப்படத்திற்காக உருவாக்கிவிட்டோம். இப்போது 'ராக்ஸ்டார்' படத்தை விட 'ஹைவே' படத்தில்தான் அதிக பாடல்கள் உள்ளன" எனப் பகிர்ந்திருக்கிறார்.



















