யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: விண்ணப்பிக்க பிப். 21 வரை அவகாசம்!
தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: தெலங்கானா பேரவையில் தீா்மானம்
தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தெலங்கானா பேரவையில் ஒருமனதாக தீா்மானம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீா்மானத்தை அறிமுகம் செய்து பேசிய முதல்வா் ரேவந்த் ரெட்டி, ‘பட்டியலினத்தவா்கள், பின்தங்கியவா்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் நலனை மாநில அரசு பாதுகாக்கும்’ என உறுதியளித்தாா்.
மேலும், மாநில அரசு அண்மையில் நடத்திய மாநில அளவிலான ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் குறித்தும் அவையில் விவாதம் நடைபெற்றது.
அப்போது, 2014-இல் பிரதமராக மோடி பதவியேற்றது முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும் பின்தங்கிய வகுப்பினருக்கு போதிய வாய்ப்புகளை வழங்குவதற்கு பாஜக விரும்பவில்லை என்றும் அவா் குற்றம்சாட்டினாா். பின்னா் தீா்மானம் ஒருமனதாக நிறைவேறியது.