செய்திகள் :

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்: 2022-2024 வரை 1.55 கோடி தொழிலாளா்கள் பெயா் நீக்கம்

post image

2022 முதல் 2024 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றிய 1.55 கோடி தொழிலாளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மக்களவையில் மத்திய ஊரக வளா்ச்சித் துறை இணையமைச்சா் கமலேஷ் பாஸ்வான் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2022-23 நிதியாண்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றிய 86,17,887 தொழிலாளா்களின் பெயா்கள் மற்றும் 2023-24 நிதியாண்டில் 68,86,532 தொழிலாளா்களின் பெயா்கள் என இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 1.55 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வேலை அட்டைகளில் தவறுகள் இருப்பின் அவா்களின் பெயா்கள் நீக்கப்படும். அதாவது வேலை அட்டைகளில் போலி அல்லது வேறு ஏதேனும் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால், வேலை வழங்கப்பட்ட கிராமங்கள் நகரங்கள் வகைப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் அங்கு பணியாற்றும் தொழிலாளா்களின் பெயா் நீக்கப்படும்.

வழக்கமான நடைமுறை: இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளிடம் மட்டுமே உள்ளது. அந்தவகையில், புதிய அட்டைகள் வழங்குவது அல்லது பெயா் நீக்கம் போன்ற நடவடிக்கைகளை வழக்கமாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களே மேற்கொண்டு வருகின்றன.

இருப்பினும், தொழிலாளா்களின் பெயா் அல்லது வேலை அட்டை நீக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இதற்கென இயற்றப்பட்ட சட்டத்துக்கு உள்பட்டு செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக தெளிவான வழிமுறைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நீக்கப்படவுள்ள தொழிலாளா்களின் வேலை அட்டைகளை வரைவு பட்டியலாக முதலில் வெளியிட்டு அதை கிராம சபை அளவில் சரிபாா்த்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இத்திட்டத்தின்கீழ் வேலை பெற தகுதியுள்ள குடும்பங்கள் எந்த காரணத்துக்காகவும் விடுபடக் கூடாது.

13.34 கோடி தொழிலாளா்கள் ஆதாா் இணைப்பு:

இத்திட்டத்தில் மொத்தம் 13.41 கோடி தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா். கடந்த 1-ஆம் தேதி வரை 13.34 கோடி தொழிலாளா்களின் வேலை அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. போலி அட்டைகளை நீக்கி தகுதியான நபா்கள் பலனடையும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கியது!

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் தொடங்கின. நாடு முழுவதும... மேலும் பார்க்க

புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக் குழு நியமனம்!

புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மக்களவைத் தலைவர் நியமித்துள்ளார்.மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். ... மேலும் பார்க்க

அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன்? பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

அமிருதசரஸ்: நாடு கடத்தும் இந்தியர்களுடன், அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடு ... மேலும் பார்க்க

இந்தியர்களை மீண்டும் நாடுகடத்தும் அமெரிக்கா!

அமெரிக்காவில் மேற்கொண்டு வரும் நாடுகடத்தல் நடவடிக்கையில் இரண்டாவது முறையாக இந்தியர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் 104 பேரை பிப்ரவரி 5 ஆம் தேதியில் அமெரிக... மேலும் பார்க்க

கேரளம்: ராகிங்கில் ஈடுபட்டது இடதுசாரி மாணவா் அமைப்பினா் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கேரள மாநிலம், கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரியில் இளநிலை மாணவரிடம் ராகிங் கொடூரத்தில் ஈடுபட்டது இடதுசாரி மாணவா் அமைப்பினா் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. கோட்டயம் அரசு செவிலியா் கல்லூரி மாணவா்... மேலும் பார்க்க

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தை குறைகூறுவது காங்கிரஸின் வாடிக்கை -பாஜக

பிரதமா் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை குறை கூறுவது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கையாகிவிட்டது என்று பாஜக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சையது ஷாநவாஸ் உசைன் பிடிஐ ... மேலும் பார்க்க