செய்திகள் :

தேர்தலில் தோல்வியே காணாத கலைஞர்; 1984 தேர்தலில் மட்டும் போட்டியிடாதது ஏன்? | Vote Vibes

post image

தமிழக அரசியல் வரலாற்றில் தோல்வியே காணாத தலைவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி.

1957-ம் ஆண்டு போட்டியிட்ட குளித்தலையில் தொடங்கி, 2016-ம் ஆண்டு போட்டியிட்ட திருவாரூர் வரை தான் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே ருசித்தவர்.

கலைஞர் மு.கருணாநிதி
கலைஞர் மு.கருணாநிதி

1984 தேர்தலில் போட்டியிடாத கலைஞர்

அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தமிழக சட்டமன்றத்தின் தவிர்க்க முடியாத முகமாக விளங்கிய கலைஞர் ஒரே ஒரு முறை மட்டும் தேர்தல் களத்தில் வேட்பாளராக களமிறங்காமல் இருந்திருக்கிறார். அதுதான் 1984-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல்.

ஏன் கலைஞர் போட்டியிடவில்லை?

1983-ம் ஆண்டு இலங்கை வடகிழக்கு பகுதியில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அந்த சமயத்தில் அங்கிருந்த தமிழர்களுக்கு ஆதரவாகவும் மத்திய - மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் கலைஞர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

அவருடன் சேர்ந்து மறைந்த கே. அன்பழகனும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

கலைஞர் மு.கருணாநிதி
கலைஞர் மு.கருணாநிதி

ராஜினாமா

இவர்கள் ராஜினாமா செய்த அடுத்த ஆண்டே தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றிருக்கிறது.

பதவியை ராஜினாமா செய்த கையோடு மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது தார்மீக ரீதியாகச் சரியாக இருக்காது என்று கலைஞர் கருதியதால் 1984 தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்று சொல்லப்படுகிறது.

எம்.ஜி.ஆர் - இந்திரா காந்தி அனுதாப அலை

தவிர 1980 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திரா காங்கிரஸ் 1984-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.

அந்த சமயத்தில் அதிமுக தலைவராக இருந்த எம்.ஜி. ஆர் சிறுநீரகக் கோளாறு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

மறுபுறம் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.இந்த இரண்டு சம்பவங்களும் தமிழக மக்களிடையே ஒரு மிகப்பெரிய அனுதாப அலையை உருவாக்கியிருக்கிறது.

எம்.ஜி.ஆர் இந்திரா காந்தி
எம்.ஜி.ஆர் இந்திரா காந்தி

எம்.ஜி.ஆர் மீதான மக்களின் அதீத அன்பும், இந்திரா காந்தியின் மறைவால் ஏற்பட்ட காங்கிரஸின் ஆதரவு அலையும் சேர்ந்து திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதால் 1984- தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்று முதலமைச்சராகவும் பதவி ஏற்றிருக்கிறார்.

அந்தக் கூட்டணியின் வெற்றியை முதலிலேயே கலைஞர் தீர்மானித்ததாலும் 1984 தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது.

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க