செய்திகள் :

த.வெ.க. எம்.எல்.ஏ. பேரம் வழக்கு: முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு

post image

த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொண்டு ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பணம் வழங்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், IPDS நிறுவனர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 8 மற்றும் 12 உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (FIR), த.வெ.க. எம்.எல்.ஏ. ஒருவரை தொடர்புகொண்டு 35 கோடி ரூபாய் வரை வழங்கத் தயாராக இருப்பதாகவும், சபாநாயகர் மீதான தீர்மானத்தின் போது குறிப்பிட்ட வகையில் செயல்பட வேண்டும் என்றும் பேரம் பேசியதாக குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் நரேஷ், கிருஷ்ணன் மற்றும் அசோக் குமார் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இருவருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும், திங்கட்கிழமை நடைபெறவிருந்த விசாரணைக்கு இருவரும் ஆஜராகவில்லை.

அசோக்குமார், செந்தில் பாலாஜி

இந்த நிலையில், வழக்கில் தன்னை கைது செய்யும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி, முன்ஜாமீன் வழங்குமாறு கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அரசியல் உள்நோக்கத்துடன் தனது பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தரப்பில் வாதிடப்படலாம் என சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு, அடுத்தகட்ட விசாரணை மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.!

"எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!" - டெல்லி தடியடி வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் பேரணி நடத்தினர். இதனால் கடந்த சில நாள்களாக டெல்லியே ஸ்தம்பித்துப் ப... மேலும் பார்க்க

'கிராம மயானத்தை வேறு உள்ளாட்சியைச் சேர்ந்தவர்கள் உரிமை கோர முடியாது' - உயர்நீதிமன்றம் உத்தரவு

தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அன்பழகன், தவராஜா, ரகுநாதன் ஆகியோர், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.அதில். “எங்கள் கிராமத்தில் இறந்து போனவர்களின் உடல்களை சுக்குவாடன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: `புதிய அரசின் நிலைப்பாடு என்ன?' - உச்ச நீதிமன்றம் | விசாரணை முழு விவரம்

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி குமாரி மகா சபா என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம், ஒவ்வொரு மாவட்டத்... மேலும் பார்க்க

எ.வ.வேலு விவகாரம் : `நீங்க ஆளுங்கட்சியாக இருந்தபோதும் இதை தானே.!' - நீதிபதிகள் சுவாரஸ்ய கமெண்ட்

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 5,000 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகளை மேம்படுத்தும் பணிகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில்,... மேலும் பார்க்க

தமிழகப் பசு வதைத் தடை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழகத்தில் பெரும் அரசியல் மற்றும் சமூக விவாதங்களை ஏற்படுத்தியிருந்த பசு வதைத் தடை விவகாரத்தில், தற்பொழுது உச்ச நீதிமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நா... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தில் அநாகரிக நடத்தை : நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசியெறிந்த மனுதாரர்! - நடந்தது என்ன?

இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மனுதாரர் ஒருவர் நீதிபதிகள் அமர்வை நோக்கி ஆவணங்களை வீசி எறிந்த விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ காவல்துறை அதிகாரிக்கு எதிராக ... மேலும் பார்க்க