செய்திகள் :

நடத்தையில் சந்தேகம்; நெல்லை பேருந்து நிலையத்தில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் - அலறியடித்த பயணிகள்

post image

நெல்லை மாவட்டம், பாலாமடையைச் சேர்ந்தவர் சுதாகர். இவரும் பக்கத்து ஊரான சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். இருவரும் காதலித்து வந்தனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக பேச்சியம்மாள், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

குழந்தைகளை தனது உறவினரின் பராமரிப்பில் விட்டுள்ளார். குடும்பச் செலவுகளுக்காக தனியார் விடுதியில் தங்கியிருந்து ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் பேச்சியம்மாள்.

பேச்சியம்மாள்- சுதாகர்

வாரந்தோறும் குழந்தைகளை பார்ப்பதற்காக ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், ஊர் பெரியவர்களின் முன்னிலையில் சுதாகர் பேசி மனைவியையும், குழந்தைகளையும் தன்னுடன் அனுப்புமாறு பேசியுள்ளார். ஆனால், பேச்சியம்மாள் வர மறுத்துள்ளார். இந்த நிலையில், குழந்தைகளை பார்ப்பதற்காக நெல்லை வண்ணார்ப்பேட்டையில் இருந்து சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் சென்றுள்ளார். சந்திப்பு பேருந்து நிலையத்தில் அவர் இறங்கியதும் சுதாகர் அவரை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர் மறுத்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த சுதாகர் அரிவாளால் பேச்சியம்மாளின் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த சக பயணிகள் அலறியடித்து ஓடினர். தப்பியோடிய சுதாகர் சிறிது நேரத்தில் நெல்லை சந்திப்பு காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

மனைவி மீதான நடத்தை சந்தேகத்தில் கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கொலை செய்யப்பட்ட பேச்சியம்மாள்

இருப்பினும் துணிகரமாக கொலைச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து நெல்லை மாநகர துணை கமிஷனர் விஜயகுமார் கூறுகையில், “சந்திப்பு பஸ் நிலையத்தில் போலீஸாரின் தொடர் கண்காணிப்பு இருந்து கொண்டே வருகிறது. தேர்தல் பணி மற்றும் பிற சட்டம், ஒழுங்கு பணிகளிலும் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். புறக்காவல் நிலையத்தில் சம்பவம் நடந்த நேரத்தில் போலீஸார் இருந்தார்களா? அல்லது வேறு பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

சென்னை: பிரபல ரௌடி என்கவுன்ட்டர் - யார் இந்த `தொப்பை கணேஷ்'?

சென்னை வியாசர்பாடி பிவி காலனி சேர்ந்தவர் டில்லி கணேஷ் என்கிற பிரபல ரௌடி கணேஷ். இவருக்கு தொப்பை இருந்ததால் சக கூட்டாளிகளால் தொப்பை கணேஷ் என அழைக்கப்பட்டார். அதனால் போலீஸ் ரெக்கார்டில் இவரின் பெயர் தொப்... மேலும் பார்க்க

கோவை: "திமுக ஆட்சியின் அவலநிலை" - பெண் காவலர்களுக்கு பாலியல் வன்கொடுமை; காவல்துறை உயர் அதிகாரி கைது

கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு 4-வது பட்டாலியன் படைப் பிரிவு இயங்கி வருகிறது. இதில் கமாண்டாக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்கு பணியா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 5 நாள்களாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸார்; பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ். விவசாயியான இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இளையமகள், குறுக்குச்சாலையில் உள்ள அரசு மேல்நி... மேலும் பார்க்க

புதுச்சேரி: திருமணத்தை மறுத்த காதலி; பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர காதலன்! - அதிர வைக்கும் பின்னணி

புதுச்சேரி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் காவ்யா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), அண்ணா சாலையிலுள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவரும், இந்திரா நகரைச் சேர்ந்த ஓட்டுநர் ஜோசப் என்பவரும் ஒருவரைய... மேலும் பார்க்க

மண்டபத்தில் கைதான கேங்க்ஸ்டர்; `திருமணம் முடியும்வரை விடுங்கள்' - போலீஸாரிடம் கதறி அழுத மணமகள்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஆகாஷ் என்பவருக்கு திருமணம் முடிவாகி இருந்தது. இதற்காக திருமண மண்டபத்திற்கு உறவினர்கள் வந்து குவிந்து இருந்தனர். மணமகன் மணக்கோலத்தில் இருந்தார். அந்நேரம் திடீரென போலீஸ் வ... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்கள் அடித்துக் கொண்டதில் எட்டாம் வகுப்பு மாணவன் பலி - துறையூர் அதிர்ச்சி

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த புலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நல்ல வண்னிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். விவசாயியான இவரது மகன் செல்வம் (வயது:13). இவர், கரட்டாம்பட்டியில் உள்ள அரசு மேல்நி... மேலும் பார்க்க