செய்திகள் :

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ. 30 கோடியில் ஹெலிகாப்டர்; சுகேஷ் வழங்கிய காதலர் தினப் பரிசு!

post image

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் சிறையில் இருக்கும் அவரது தொழிலதிபரான அவரது கணவரை வெளியில் கொண்டு வர உதவுவதாகக் கூறி ரூ.200 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கு, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷனிடமிருந்து வாங்கித்தருவதாகக் கூறி தினகரனிடம் பணமோசடி செய்தது எனப் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் சுகேஷ் சந்திரசேகர்.

சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் இருந்தபோது மாடல் அழகிகள், நடிகைகளை சிறைக்கே வரவைத்து அவர்களுக்கு பணமும், பரிசுப் பொருள்களும் கொடுத்தார்.

அப்படி சிறைக்கு வராதவர்களுக்கு கூரியர் மூலம் விலையுயர்ந்த பொருள்களை அவர்களது வீட்டிற்கே அனுப்பி வைத்தார். அப்படி வீட்டிற்கே பரிசுப் பொருள்களை அனுப்பியதில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷிடமிருந்து பல கோடி ரூபாய் பரிசுப் பொருள்களைப் பெற்றுள்ளார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்
ஜாக்குலின் பெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்

இருவரும் தம்பதி போன்று வாழ்ந்தனர். ஆனால் சுகேஷ் கொடுத்த பரிசுப் பொருள்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துவிட்டது.

சுகேஷ் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது அவரைத் தனி விமானத்தில் சென்னைக்குச் சென்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் பார்த்து வந்தார். இதனால் சுகேஷ் மீதான மோசடி வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜாக்குலின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், தான் நிரபராதி என்றும், சுகேஷ் தொடர்பான விசாரணையில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்.

விசாரணையில் உள்ளதாகக் கூறப்படும் நிதிக்குற்றங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவரது சட்டப் பிரதிநிதிகள் முன்பு கூறியுள்ளனர்.

சுகேஷ் சிறையில் இருந்தாலும், கிறிஸ்துமஸ், காதலர் தினம், புத்தாண்டு என முக்கிய பண்டிகைகளுக்கு ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு பரிசுகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது காதலர் தினத்திற்கு சுகேஷ் காதல் பரிசாக ஹெலிகாப்டர் ஒன்றை ஜாக்குலினுக்கு வழங்கி இருக்கிறார்.

இது தொடர்பாக சுகேஷ் தனது கைப்பட ஜாக்குலினுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ''பேபி, ராணி போன்ற உனக்கு சிறப்புப் பரிசு ஒன்றை ஏற்பாடு செய்து இருக்கிறேன். காதலர் தினத்தின் மென்மையான ஒளியில் உலகம் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில், நீ என் அருகில் இல்லாமல் அது முழுமையடையாததாக உணர்கிறேன்.

வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு என் இதயம் வலிக்கிறது. என்னுடைய ஒவ்வொரு இதயத்துடிப்பும், குறிப்பாக காதலர் தினத்தில் நமக்கு இடையேயான தூரத்தை நினைவூட்டுகிறது, ஒவ்வொரு சுவாசமும் உன் பெயரைச் சுமந்து செல்கிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Jacqueline
Jacqueline

சுகேஷ் ஏர்பஸ் எச் ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஜாக்குலினுக்கு காதலர் தின பரிசாகக் கொடுப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த ஹெலிகாப்டர் ரூ. 30 கோடியாகும். இதற்கு முன்பு சொகுசு படகு, ஜெட் விமானம் போன்றவற்றை ஜாக்குலினுக்குப் பரிசாக வழங்குவதாக அறிவித்தார்.

தற்போது ஹெலிகாப்டர் பரிசாகக் கொடுத்து இருப்பது குறித்து ஜாக்குலின் எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆரம்பத்தில் சுகேஷ் கடிதம் எழுதத் தடை விதிக்க வேண்டும் என்று ஜாக்குலின் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் இப்போது எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார்.

Akshay Kumar: "நான் அவரை அறைந்த பிறகு என் கரியரே முடிந்துவிட்டது என நினைத்தேன்" - அக்‌ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கடைசியாக 'ஜாலி எல்.எல்.பி 3' படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய அடுத்த திரைப்படமான 'பூத் பங்களா' திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. Akshay Kumarதற... மேலும் பார்க்க

45 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்?

70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 'அர்மான் திரைப்படத்தின் பாடலான 'ரம்பா ஹோ' பாடலுக்கு புடவையில், மிக நேர்த்தியான உடல் மொழியில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்ஆகி வருகிறது. யார் இவர் என்று சமூ... மேலும் பார்க்க

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி!

‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் பின்னணி பாடகி ஜாஸ்மின் சாண்டல்ஸ், மேடையிலேயே பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பேசியிருக்கிறார். இந்த சம்பவத்தின் பு... மேலும் பார்க்க

`மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?'- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?

பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவர் மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை இருவரும் மறுத... மேலும் பார்க்க

Epstein Files: "என் படங்களைவிட, என் பெயரில் வரும் செய்திகள்தான் பிரபலம்" - சர்ச்சைக்கு அனுராக் பதில்

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய அரசியல் முகங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. பா... மேலும் பார்க்க

`அவரைச் சந்திக்க விரும்பியதில்லை' - தந்தையின் பெயரை பயன்படுத்தாதது குறித்து நடிகை தபு விளக்கம்

தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம் உட்பட சில படங்களில் நடித்திருக்கும், பிரபல பாலிவுட் நடிகை தபுவிற்கு 54 வயதாகிறது. அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.தபு தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித... மேலும் பார்க்க