இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் ராகுல் டிராவிட் வாக்குவாதம்!
நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த டிராவிட்டின் விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அமைதியான ஆட்டம் மற்றும் மிகச்சிறந்த தலைமைக்கு பெயர் பெற்றவரான ராகுல் டிராவிட், பெங்களூருவில் ஒரு ஆட்டோ ஓட்டுநருடன் வாய்த் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20 உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தவரான ராகுல் டிராவிட் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல்லுக்கு முன்னதாக, தற்போது தனது சொந்த ஊரான பெங்களூரில் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், கர்நாடகத்தின் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு அருகிலுள்ள கன்னிங்ஹாம் சாலையில், ராகுல் டிராவிட்டின் கார் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் விபத்து நேரிட்டது. இதனால் நடுரோட்டில் நின்று ஆட்டோ ஓட்டுநரிடம் டிராவிட் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் | கம்மின்ஸ் காயம்: சாம்பியன்ஸ் டிராபி ஆஸி. அணியின் புதிய கேப்டன் யார்?
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டார். இந்த விபத்து குறித்து எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் இதன் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆட்டோ ஓட்டுநர் திடீர் பிரேக் போட்டதால் டிராவிட்டின் கார் மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விடியோவின் இறுதியில், கன்னடத்தில் பேசிய ஓட்டுநர், தவறை ஒப்புக்கொண்டார். மேலும், டிராவிட் ஆட்டோ ஓட்டுநரின் எண்ணை புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் அங்கிருந்தவர் தெரிவித்தனர்.
மீம் மெட்டீரியலான விடியோ
இது ஒருபுறம் இருக்க சில ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான “இந்திரா நகர் குண்டா” என்ற விளம்பரத்தில் போக்குவரத்து நெரிசலில் காருக்கு சிக்கியிருக்கும் ராகுல் டிராவிட், அருகிலிருக்கும் மற்ற கார்களை ஆக்ரோஷமாகத் தாக்குவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த இரு விடியோக்களையும் ஒப்பிட்டு இணையதளவாசிகள் ராகுல் டிராவிட்டை கிண்டலடித்து வருகின்றனர்.