"5 ஆண்டு ரயில் விபத்துகளில் எத்தனை மரணங்கள்?" - மதுரை எம்.பி கேள்விக்கு ரயில்வே ...
நடையனூரில் மாநில மல்யுத்தப் போட்டி
கரூா் மாவட்டம் நடையனூரில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போட்டிக்கு நடுவா்களாக கணேசன், காா்த்திக் உள்ளிட்டோா் செயல்பட்டனா். போட்டிகளை கரூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் சுப்ரமணியன் தொடக்கிவைத்தாா்.
போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
வென்ற மாணவ, மாணவிகளை தமிழ்நாடு அமெச்சூா் மல்யுத்த சங்க பொதுச் செயலாளா் லோகநாதன் மற்றும் சமூக அலுவலா்கள், பொதுமக்கள், பாராட்டினா்.