செய்திகள் :

நவீன தொழில்நுட்பத்தில் வாழை, மஞ்சள் சாகுபடி; ரகங்கள் தேர்வு, கருவிகள் பயன்பாடு; மாபெரும் கருத்தரங்கு

post image

பசுமை விகடன் நடத்தும் சார்பில் 'வாழை + மஞ்சள் சாகுபடி, லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்' என்ற தலைப்பில் ஈரோடு அடுத்த நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

21‑12‑2025, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இக்கருத்தரங்கு நடைபெறும்.

நிகழ்ச்சி அறிவிப்பு


தமிழ்நாட்டில் வாழையும், மஞ்சளும் முக்கிய பயிராக இருந்து வருகிறது. குறிப்பாக வாழை எல்லா மாவட்டங்களிலும் விளையக்கூடிய பயிராக இருந்து வருகிறது. இந்த வாழையில் எந்த ரகம் சாகுபடி செய்வதற்கு ஏற்றது, எவையெல்லாம் வர்த்தக ரீதியாக விற்பனையாகக்கூடிய ரகமாக இருக்கிறது, அதை தாக்கும் பூச்சிகள், நோய்கள் பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதைப் பற்றி வழிகாட்ட இருக்கிறார் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம்தின் இயக்குநர் முனைவர் செல்வராஜன்.

அதேபோல மேட்டுப்பாத்தி முறையில் வாழை சாகுபடி செய்து அதிக மகசூல் எடுப்பதற்கான வழிகாட்டல்களை வழங்க இருக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த வாழை விவசாயி சண்முகசுந்தரம். அதேபோல வாழை வனம் உருவாக்கும் தொழில்நுட்பம் குறித்தும் பேச இருக்கிறார்.

நிகழ்ச்சி அறிவிப்பு

வாழை மற்றும் மஞ்சளில் சாகுபடி, மதிப்புக்கூட்டலுக்கு உதவும் கருவிகள் குறித்து பேச இருக்கிறார் கோவையில் உள்ள மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி செந்தில்குமார். வாழை, மஞ்சள் சாகுபடியில் நவீன கருவிகளின் பயன்பாடு குறித்தும், அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விளக்க இருக்கிறார்.

வாழை மற்றும் மஞ்சளில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள், வர்த்தக வாய்ப்புள்ள மஞ்சள் ரகங்கள், பூச்சி, நோய் மேலாண்மை, பயிற்சிகள் குறித்து பேச இருக்கிறார் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அழகேசன்.

நிகழ்ச்சி அறிவிப்பு

மஞ்சள் சாகுபடியில் ஆண்டுக்கு 3 லட்சம் லாபம் எடுப்பதற்கு வழிகாட்டுகிறார் முன்னோடி இயற்கை விவசாயி சக்திவேல். ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்த இவர், 30 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் மஞ்சள் சாகுபடி செய்து ஏக்கருக்கு 25 டன் எடுத்து வருகிறார். இதற்கான வழிகாட்டல்களை வழங்க இருக்கிறார்.

மஞ்சள் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள், கருவிகள் குறித்தும், சந்தைப்படுத்துவது குறித்தும் வழிகாட்ட இருக்கிறார் ஈரோடு மாவட்ட தோட்டக்கலை அலுவலர் பிரியா.

சிறு, குறு விவசாயிகள் வாழை, மஞ்சளில் லாபம் ஈட்டுவதற்கான வழிகாட்டல்களும் இந்தக் கருத்தரங்கில் கிடைக்கும்.

பசுமை விகடன் நடத்தும் சார்பில் வாழை + மஞ்சள் சாகுபடி, லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம் என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கு ஈரோடு அடுத்த நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உ.வே. சாமிநாதையர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

21‑12‑2025, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இக்கருத்தரங்கு நடைபெறும்.

நிகழ்ச்சி அறிவிப்பு

விவசாயிகள், இளைஞர்கள், வேளாண் மாணவர்கள், பெண்கள் தொழில் முனைவோர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

இந்தக் கருத்தரங்கை தி அக்ரி வேர்ல்டு நிறுவனம் இணைந்து வழங்குகிறது. சத்யம் அக்ரோ கிளினிக், எச்.டி.எஃப்.டி பேங்க், நன்னீர் அமைப்பு, என்.பி டிரிப் இர்ரிகேஷன், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய அமைப்புகளும் தங்களுடைய ஆதரவை வழங்கியுள்ளன.

முன்பதிவு செய்ய பின்வரும் லிங்கை க்ளிக் செய்து பெயர், வயது, முகவரி ஆகிய விவரங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளவும்.

 https://bit.ly/oragnictranning

கருத்தரங்கில் தேநீர், மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 99400 22128

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ப.மோகனப் பிரியா,உடுமலைப்பேட்டை,திருப்பூர்.90034 22422பூங்கார் சத்து மாவு, ரத்தசாலி சத்து மாவு, மணிச்சம்பா உப்மா, புட்டு மாவு வகைகள்.கே.எஸ்.கணேசன்,கும்பகோணம்,தஞ்சாவூர்.93443 00656இய... மேலும் பார்க்க

இயற்கை உரம் என்ற பெயரில் ரசாயன உரம் விற்பனை; குடோனுக்கு சீல்; சிக்குகிறார்களா வேளாண் அதிகாரிகள்?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்துள்ள இ.ராமநாதபுரம் கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவருக்குச் சொந்தமான பொன்னுஸ் நேச்சுரல் புரொடக்ட் எனும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குரசாயனங்களை அதிக வி... மேலும் பார்க்க

Coffee bean: காபி கொட்டைகளை தின்று அழிக்கும் துளைப்பான் வண்டுகள்; 1990-க்கு பிறகு மீண்டும் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் 7,348 ஹெக்டேர் பரப்பளவில் காபி பயிரிடப்படுகிறது. உள்ளூரைச் சேர்ந்த சில பழங்குடிகள் முதல் தனியார் பெருந்தோட்ட நிறுவனங்கள் வரை, நீலகிரியில் விளைவிக்கும் காஃபி கொட்டைகளை நாட்டின் பல ... மேலும் பார்க்க

டிட்வா புயல்: தொடர் மழையால் வெள்ளக்காடான டெல்டா வயல்கள்; 1 லட்சம் ஏக்கர் நெற் பயிர் மூழ்கிய வேதனை

டெல்டா மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் டிட்வா புயல் காரணமாக நேற்று பகல் முழுவதும் தொடர் மழை பெய்தது. இரவுக்குப் பிறகு சற்று லேசாகப் பெய்த மழை பரவலாக இருந்தது. நாகப்பட்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: முருங்கைக்காய் கிலோ ரூ.320, கத்தரிக்காய் ரூ.120 - விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2,000 எக்கர் பரப்பளவில் யாழ்ப்பாணம்,... மேலும் பார்க்க