செய்திகள் :

"நான் அசிங்கமான பெண் என்று கூறி பிரிந்து சென்றார்" - கணவரின் நினைவுகளைப் பகிர்ந்த நடிகை அபராமேத்தா

post image

பாலிவுட் நடிகையும், டிவி நடிகையுமான அபரா மேத்தா பாலிவுட் நடிகர் தர்சன் ஜரிவாலா என்பவரை 1982ம் ஆண்டு திருமணம் செய்தார்.

இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளாமல் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாகப் பிரிந்து வாழ்கின்றனர். தர்சன் ஜரிவாலா மிகவும் பிரபலமான காந்தி, குரு, மைபாதர் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார்.

நடிகை அபரா ஏக்தா கபூரின் 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி'யில் சவிதா மன்சுக் விராணியாக நடித்து பிரபலமானார். அபரா மேத்தா தனது கணவரும் நடிகருமான தர்ஷன் ஜரிவாலாவிடமிருந்து நீண்டகாலமாகப் பிரிந்திருப்பதைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ''அமெரிக்காவில் நடந்த கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இந்தியா திரும்பினேன். நான் அமெரிக்காவில் இருந்த போது எங்களது திருமண நாளில் எனது கணவர் போன் செய்து என்னிடம் பேசினார்.

அபரா மேத்தா
அபரா மேத்தா

அப்போது, 'நாம் கண்டிப்பாகப் பேச வேண்டும்' என்று அவர் சொன்னார். அவர் எதைப் பற்றிப் பேச விரும்புகிறார்? என்று நான் நினைத்தேன். அமெரிக்காவில் எனது நிகழ்ச்சிகளை முடித்துவிட்டுத் திரும்பினேன். அதிகாலை 3 மணிக்கு வந்து இறங்கி, 5 மணிக்கு வீட்டிற்குச் சென்றேன்.

ஆனால் காலை 7 மணிக்கே எனக்கு வேலை இருந்தது. அப்போது அவர் என்னிடம், 'அபரா, நாம் பிரிந்துவிட வேண்டும். ஏனென்றால் உன் மீதான காதல் எனக்கு இல்லாமல் போய்விட்டது. எனக்கு உன்னை இனி பிடிக்கவில்லை.

என் வாழ்க்கையிலேயே நான் சந்தித்ததிலேயே மிகவும் அசிங்கமான பெண் நீதான்' என்று கூறினார்.

அன்று காலை அவர் ஒரு கோப்பை தேநீருடன் ஊஞ்சலில் அமர்ந்திருக்க, நான் என் படப்பிடிப்புக்குக் கிளம்பிச் சென்றேன். அன்று மூன்று முக்கியமான காட்சிகளைப் படமாக்க வேண்டியிருந்தது. அதிகாலை 5 மணிக்கே அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்ததால், படப்பிடிப்பின் இடைவேளைகளில் நான் அவ்வப்போது தூங்கி வழிந்து கொண்டிருந்தேன்.

பின்னர் மதிய வேளையில், முழுமையாக விழிப்புணர்வு பெற்ற நிலையில், 'தர்ஷன் என்ன சொன்னார்? அவர் அதை உண்மையாகவே சொல்லியிருக்க முடியாது' என்று நான் நினைத்தேன். தர்ஷன் காலப்போக்கில் எங்கள் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார்.

அன்று முதல் இருவரும் பிரிந்து வாழ்கிறார். அதே சமயம் இப்போதும் அவருடன் நல்லுறவைப் பேணி வருகிறேன். தனித்தனியாக வாழ்ந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் இயல்பான புரிதலோடு இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

Ramayana: "ராமாயணா முதல் பாகத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.4000 கோடி கிடையாது!" - கணக்கு சொல்லும் யஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படம், இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட் முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படமாகப் பேசப்பட்டு வருகிறது. Ramayana Movieஇப்படத்தின் தயாரிப்பாளர் நம... மேலும் பார்க்க

குளிர்பானத்தில் மயக்க மருந்து; 33 வயது நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த 73 வயது இயக்குநர்

பாலிவுட் படங்களான 'படே தில் வாலா' (Bade Dil Wala) மற்றும் 'ஜோரு கா குலாம்' (Joru Ka Ghulam) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஷகீல் நூரானி (73). திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ஷகீல் நூரானி மீது ... மேலும் பார்க்க

Spotify: முதல் முயற்சி; ஸ்பாட்டிஃபையில் வெளியாகும் முதல் குறும்படம்! - பிஜாய் நம்பியார் மனைவி பேட்டி

ஆடியோ வடிவத்திற்கு என பிரத்யேகமாக இயங்கி வந்த 'ஸ்பாட்டிஃபை' தளத்தில், இப்போது குறும்படங்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. 'டுயட்' என்ற குறும்படத்தை ஸ்பாட்டிஃபை தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த... மேலும் பார்க்க

Pradeep Rawat: ரத்தப் புற்றுநோயால் 'கஜினி' பட வில்லன் காலமானார்

'லகான்', 'கஜினி', 'வீரம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ராவத் நேற்று காலமானார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இவருக்கு வயது 74. ... மேலும் பார்க்க

Ramayana: "அந்தச் சம்பவத்துக்காக மட்டுமே சூர்ப்பணகை நினைவுகூரப்படுகிறார்; ஆனா..."- ரகுல் ப்ரீத் சிங்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகத்தின் டிரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இப்படத்தில் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடிகை ரகுல் ப... மேலும் பார்க்க

Gen Z: "இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாதீர்கள்" - விமர்சனங்களுக்கு கங்கனா ரனாவத் பதில்

நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், சமீபத்தில் Gen z இளைஞர்களின் போராட்ட முறைகள் மற்றும் வாழ்க்கை முறையை விமர்சித்து பேசிய சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் ... மேலும் பார்க்க