செய்திகள் :

`நான் இருக்கேன்' கையில் முத்தமிட்டு ஆறுதல் சொன்ன விஜய்; உருகிய வி.எஸ்.பாபு... 10 நிமிட சந்திப்பு!

post image

75 வயதாகும் வி.எஸ்.பாபுவுக்கு சமீபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். செப்.9-ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், ஐ.சி.யூ-வில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். லண்டன் கிளம்புவதற்கு முன்பாக வி.எஸ்.பாபுவிடம் போனில் பேசிய முதல்வர் விஜய், தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியவுடன், நேரில் வந்து பார்ப்பதாகச் சொல்லியிருந்தார். அதன்படி, இன்று(செப்.23-ம் தேதி) வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார் முதல்வர் விஜய்.

VS Babu
வி.எஸ்.பாபு - VS Babu

அந்தச் சந்திப்பு குறித்து த.வெ.க-வின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். "மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் வி.எஸ்.பாபுவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் 15 நிமிடங்கள் பேசினார் முதல்வர் விஜய். பாபுவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், எடுக்கப்பட்ட பரிசோதனை விவரங்களை முழுவதுமாகக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, 'நான் அவரை நேரில் பார்க்கலாமா... அப்படி பார்த்தால் அவருக்கு நோய் தொற்று ஏதாவது உண்டாகிவிடுமா...' என்று கேட்டார் முதல்வர். அதற்கு, 'தாராளமாகப் பார்க்கலாம். அவர் நன்கு உடல்நலம் தேறி வருகிறார். இன்னும் இரண்டொரு நாள்களில் அவரை சாதாரண வார்டுக்கு மாற்றிவிடுவோம்' என்று மருத்துவர்கள் கூறினர்.

வி.எஸ்.பாபு சிகிச்சையில் இருக்கும் அறைக்குச் சென்ற முதல்வர், பாபுவைப் பார்த்துவுடன் நெக்குறுகிவிட்டார். 'என்ன அண்ணே, எப்படி இருக்கீங்க...' என வாஞ்சையுடன் நலம் விசாரித்தவர், 'டாக்டர்கிட்ட எல்லா விஷயங்களையும் கேட்டுட்டேன். உங்களுக்கு ஒன்னுமில்லை. நல்லா உடம்பு தேறி வர்றீங்கனு சொன்னாங்க. எதைப் பத்தியும் கவலைப்படாம உடம்பை பார்த்துக்கோங்க. நான் இருக்கேன்..' என்று ஆறுதல் சொன்னார்.

விஜய்
விஜய்

பாபுவின் கையைப் பிடித்த முதல்வர், 'நீங்க கையை அசைச்சுக்காட்டி செஞ்ச சைகைதான் நம்ம கட்சியோட ட்ரேட் மார்க் ஆகிடுச்சு. சீக்கிரமா திரும்பி வந்து, அதே ஸ்டைல்ல கலக்கணும்..' என்று கையில் முத்தமிட்டார்.

முதல்வரின் இந்தச் செயலை யாருமே எதிர்பார்க்கவில்லை. வி.எஸ்.பாபுவுக்கே இன்ப அதிர்ச்சிதான். அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்துவிட்டது.

பின்னர் பாபுவின் குடும்பத்தினரிடமும் நலம் விசாரித்தவர், 'ஜெனரல் வார்டுக்கு மாற்றிய பிறகு நான் திரும்ப வர்றேன். உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காம என்னைய கேளுங்க' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் முதல்வர். பத்து நிமிடங்கள் நடந்த அந்தச் சந்திப்பில், முதல்வரின் கரிசனத்தால் வி.எஸ்.பாபுவுக்கு புது தெம்பு பிறந்துவிட்டது" என்றனர்.

``தவெக வெற்றி பெறுவதால் எந்த ஆட்சி மாற்றமும் வரப்போவதில்லை" - சிபிஎம் சண்முகம்

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தவெக- ஆட்சி அமைக்க ஆதரவளித்த இடதுசாரிகட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இந்த நிலையில், மதுராந்தகத்தில் சிபிஎம் கட்சியின்... மேலும் பார்க்க

`தேர்தல் முடிவுகள் மீது கடும் சந்தேகங்களை எழுப்புகிறது; ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்!'- ஸ்டாலின்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 1.3 கோடி பெயர்கள் நீக்கப்பட்டது, 'படிவம் 6'-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது, தேர்தல் ... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி வழக்கு: ``தொடர்புடைய குற்றவாளிகளும், துணைபோன முந்தைய ஆட்சியாளர்களும்"- சீமான் காட்டம்!

பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணியையும், பின்புலத்தில் உடந்தையாக இருந்த குற்றவாளிகளையும் கண்டறிந்து, விசாரணையையும், வழக்கையும் துரிதமாக நடத்தி, மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட... மேலும் பார்க்க

`இடைத்தேர்தல்; இணைந்த கைகள் வெற்றி' - தூத்துக்குடியில் பரபரப்பைக் கிளப்பிய விஜய் - அஜித் போஸ்டர்!

எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி- கமல் ஆகிய ஹீரோக்களின் வரிசையில் நடிகர்களான விஜய்- அஜித் திரையுலகில் முன்னணில் இருந்த காலக்கட்டத்தில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது இருவரின் படங்களும் ஒரே நேரத்தில்... மேலும் பார்க்க

இன்னும் 7 நாள்களில் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்குமா? அமெரிக்காவில் ஈரான் குழு! விரைவில் குட் நியூஸ்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது.இப்போது சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் 90 டாலர் அருகே வர்த்தகமாகி வருகிறது... Brent கச்சா எண்ணெய் 99-100 டாலர் எ... மேலும் பார்க்க

ECI `பல உத்தரவுகள் எங்கள் அனுமதி இன்றியே வெளியாகின்றன'- SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நாடு முழுவதும் மேற்கொண்ட ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) நடவடிக்கையின்போது, சுமார் 1.3 கோடி வாக்காளர் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது பெரிய பொது விவாதத்தை... மேலும் பார்க்க