செய்திகள் :

`நான் எனது இறுதிச்சடங்கு காரியங்களை எனது கண்ணால் பார்த்துவிட்டதால்.!' - முதியவரின் விநோத செயல்

post image

சிலர் தங்களது மரணத்திற்கு முன்பே தங்களது கல்லறை எந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்துவிடுவார்கள். ஒரு சிலர் தங்களது கல்லறையை தாங்கள் உயிரோடு இருக்கும்போதே கட்டி வைத்துவிடுவர். ஆனால் மத்திய பிரதேசத்தில் ஒரு முதியவர் இறந்த பிறகு செய்ய வேண்டிய சடங்குகளை தான் உயிரோடு இருக்கும்போதே செய்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி அருகில் உள்ள கரேரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹரே கல்யான் பால். 60 வயதாகும் கல்யான் பாலுக்கு திருமணமாகவில்லை. தனியாகத்தான் வசித்து வந்தார்.

நெருங்கிய குடும்ப உறவினர்களும் இல்லை. இதனால் தான் இறந்த பிறகு தனக்கு முறைப்படி கிராமத்தினர் இறுதிச்சடங்குகள் செய்வார்களா என்ற சந்தேகத்தில் கல்யான் பால் இருந்தார். இது அவருக்கு மனதில் ஒரு பெரிய கவலையாகவே இருந்தது. எனவே தான் உயிரோடு இருக்கும்போதே தனது இறுதிச்சடங்கு காரியங்களை செய்துவிட வேண்டும் என்று கல்யான் பால் முடிவு செய்தார்.

இதற்காக அவர் பிரயக்ராஜ் நகருக்கு சென்றார். அங்கு கங்கையில் புரோகிதரை அழைத்து இறந்தவர்களுக்கு செய்யும் சடங்குகளை தனது பெயரில் செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதன் பிறகு அஸ்தியை கரைத்துவிட்டு கங்கையில் நீராடுவது போன்று கல்யான் பாலும் கங்கையில் நீராடினார். அதன் பிறகுதான் அவருக்கு மனதில் ஒரு நிம்மதி வந்தது. இனி இறந்த பிறகு என்ன நடந்தாலும் கவலை இல்லை என்று நினைத்தார். பிரயக்ராஜ் நகரில் இறுதிச்சடங்குகளை முடித்துவிட்டு சொந்த கிராமத்திற்கு வந்த கல்யான் பால் 24 மணி நேர ஆன்மீக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதனை தொடர்ந்து கிராமத்து மக்கள் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். அனைவரும் இருக்கையில் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார். அதோடு தனது இறுதிச்சடங்கிற்கான அழைப்பிதழையும் கல்யான் பால் அச்சடித்து இருந்து இருந்தார். அந்த அழைப்பிதழ் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது. அதில் இறுதி கங்கை வழிபாடு மற்றும் அன்னதானம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து கிராமத்தினர் கூறுகையில், கல்யான் பால் வீட்டில் அவர் மட்டுமே மகன் ஆவார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் தனது மரணத்திற்கு பிறகு முறைப்படி சடங்குகளை செய்வார்களா என்ற கவலை கல்யான் பாலிடம் இருந்து கொண்டே இருந்தது என்றனர். சடங்குகளுக்கு பிறகு கல்யான் பால் அளித்த பேட்டியில், ''இப்போதுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன். நான் உயிரோடு இருக்கும்போதே எனது அனைத்து இறுதிச்சடங்கு காரியங்களையும் முடித்துவிட்டேன். நான் எனது இறுதிச்சடங்கு காரியங்களை எனது கண்ணால் பார்த்துவிட்டதால் இனி எப்போது எனக்கு மரணம் வந்தாலும் மன அமைதியுடன் ஏற்றுக்கொள்வேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

`கொடூரமானது' - கண்ணீர் சிந்திய இந்தியர்: 30 ஆண்டாக வசிக்கும் ஹோட்டல் உரிமையாளரை வெளியேற்றும் ஜப்பான்

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சமீப காலமாக கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த மனீஷ் குமார் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள சைதாமா எ... மேலும் பார்க்க

18 வருட உழைப்பு, ஜப்பானில் பிறந்த குழந்தைகள்... கலங்கும் இந்தியர்! - அரசின் புதிய விதிகளால் சிக்கல்!

பிசினஸ் மேனேஜர்’ விசாஜப்பானில் கடந்த 18 ஆண்டுகளாக இந்திய உணவகம் ஒன்றை நடத்தி வந்த மனிஷ் குமார் என்பவரின் வாழ்க்கை, ஒரே ஒரு அரசு உத்தரவால் தலைகீழாக மாறியிருக்கிறது.தனது ‘பிசினஸ் மேனேஜர்’ விசா புதுப்பிப... மேலும் பார்க்க

H-1B விசா போர்: இந்தியத் திறமையையும் வழிபாட்டு முறையையும் குறிவைக்கிறதா அமெரிக்கா?

ஹைதராபாத்தின் ஒரு கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமையான ஒரு கோயிலைச் சுற்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் கால்களில் வேகம் இல்லை, ஆனால் கண்களில் ஒரு மாபெரும் 'அமெரிக்கக் கனவு' இர... மேலும் பார்க்க

தொழிலதிபர் அதானி மீதான வழக்கை கைவிட அமெரிக்கா முடிவு!

தொழிலதிபர் கெளதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் மீது அமெரிக்காவில் லஞ்சப் புகார் எழுந்தது. இரண்டு பேரும் இந்தியாவில் சோலார் மின் திட்டங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்... மேலும் பார்க்க

`ஒரே ஒரு முகநூல் பதிவுக்கு, ரூ.50 லட்சம் செலவு?' - ஒருவழியாக விமானம் ஏறிய இந்திய வம்சாவளி மருத்துவர்

பாஜக-வுக்கு எதிரான ஒரு முகநூல் பதிவிட்டதற்காகப் பதியப்பட்ட வழக்கால், கடந்த நான்கு மாதங்களாக இங்கிலாந்துக்குத் திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த 49 வயதான மருத்துவர் சங்கராம் பாட்டீல், இறுதியா... மேலும் பார்க்க

தமிழக தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள்? - விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும் இந்திய வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களித்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் விவா... மேலும் பார்க்க