விஜய்யின் வேலூர் விசிட்; 25,000 பேர் திரளும் இடம் தேர்வு - தவெக சொல்வதென்ன?
"நான் 'crippling anxiety'-யால் அவதிப்பட்டேன்"- இடைவெளி எடுத்துக்கொண்டது குறித்து ஸ்ருதி ஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் 'ஆகாசம்லோ ஒக தாரா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை சாதினேனி இயக்குகிறார்.
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.

அந்த நேர்காணலில் 2018-ல் நடிப்பிலிருந்து சில காலம் இடைவெளி எடுத்துக் கொண்டது குறித்து ஸ்ருதி ஹாசன் பகிர்ந்திருக்கிறார்.
"அந்த இடைவெளியில் என்னை நானே மறுமதிப்பீடு செய்துகொண்டேன். சில மனநலப் பிரச்னைகளுக்காக நான் அந்த இடைவெளியை எடுத்துகொண்டேன்.
கடுமையானப் பதற்றத்தால் அவதிப்பட்டேன்!
நான் பல ஆண்டுகளாகக் கடுமையானப் பதற்றத்தால் (crippling anxiety)அவதிப்பட்டேன்.
அந்த பதற்றத்தால் என்னுடைய அன்றாட வேலைகளை செய்ய முடியவில்லை. நான் எதைத் தேடுகிறேன், நான் யார் என்பதில் எனக்குத் தெளிவில்லை.
அந்த இடைவெளியில், லண்டனில் இருந்தேன். அங்கு இசையின் மூலம் என்னை நான் மீண்டும் கண்டறிந்தேன்.

என்னை நானே மீட்டெடுத்தேன்...
தினமும் என் உடைகளை நானே துவைப்பது, எனக்கான உணவை நானே சமைப்பது, மெட்ரோ ரயிலில் பயணிப்பது, திரும்பி வந்து புதிதாக எழுதப் பயிற்சி செய்வது, புதிய புதிய இசைகளை உருவாக்குவது என என்னை நானே மீட்டெடுத்தேன்.
எப்போதும் ஒரு கலைஞராக இருப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
வழக்கமான கதாபாத்திரங்களை விடுத்து சவாலான வேடங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.















