செய்திகள் :

நாமக்கல் மாவட்டம், மணப்பள்ளி ஸ்ரீதங்க முனியப்பன் கோயில்; வழக்குகளில் வெற்றி அருளும் தலம்!

post image

காவிரிக்கரையோரம் அமைந்திருக்கும் ஆலயங்கள் அனைத்தும் மிகவும் மகிமை நிறைந்தவை. அவற்றில் ஒன்று ஸ்ரீதங்க முனியப்பன் ஆலயம்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது மணப்பள்ளி. இங்குதான் காவிரிக்கரையோரம் அமைந்திருக்கிறது முனியப்பன் ஆலயம். வாருங்கள் அந்தத் தலத்தின் சிறப்பினை அறிந்துகொள்வோம்.

150 வருடங்களுக்கு முன்பு, ஒரு மார்கழி மாதம் மக்கள், காலரா நோயால் பாதிக்கப்பட்டார்கள். போதிய மருத்துவ வசதி இல்லாததால், மக்கள் பெரிதும் அல்லல்பட்டார்கள். இந்த நிலையில்தான் எங்கள் ஊரைச்சேர்ந்த ஒருவருக்குச் சாமி வந்ததாம்.

‘உங்க ஊரைப் பாதுக்காக எந்தக் காவல் தெய்வமும் இல்லை. அதனால்தான், இத்தகைய துர்சம்பவங்கள் நடக்கின்றன. உங்களைக் காக்க நான் முனி வந்திருக்கிறேன். எனக்கு உங்கள் ஊரில் இடம் கொடுத்து, என்னை வணங்குங்கள். பிணியால் மக்கள் மடிவதைத் தடுப்பேன்’ என்று அருள் வாக்கு கிடைத்ததாம்.

மணப்பள்ளி ஸ்ரீதங்க முனியப்பன் கோயில்
மணப்பள்ளி ஸ்ரீதங்க முனியப்பன் கோயில்

அதனால் மகிழ்ச்சியடைந்த மக்கள், முள்காடாகக் கிடந்த இந்த இடத்தில் சிறிய கல்லில் சிலை, வேல் வைத்து வழிபடத் தொடங்கினார்கள். ஊரில் பிணிபாதிப்பு விலகியது. அன்றிலிருந்து இன்று வரை இந்த முனியப்பனைக் காவல்தெய்வமாக வணங்கி வருகிறார்கள் ஊர்மக்கள்.

2001-ல் கோயிலைப் புனரமைத்துக் கும்பாபிஷேகம் செய்தனர். பிறகு 2012-ல், ஒன்றரை டன் எடையில் 1500 மணிகளுடன் அலங்கார வேல் செய்து வைத்து, காம்பவுண்ட் சுவர் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

3-வது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலை விரிவுபடுத்திக் கட்டி அந்தக் கும்பாபிஷேகமும் நல்லபடியே நடந்துமுடிந்தது.

ஆல மரத்துக்கு அருகில் பெரிய தளம் அமைத்து, கையில் வேலுடன் அருளும் முனியப்பன் சிலையை அமைத்துள்ளது. அவருக்கு இருபுறமும் பூதச் சிலைகள் உள்ளன. மட்டுமன்றி, குதிரையில் அமர்ந்திருக்கும் கோலத்திலும் நின்றுகொண்டிருக்கும் நிலையிலும் வீரர்கள் சிலையும் வைத்தோம். முனியப்பன் வேட்டைக்குச் செல்லும்போது, உடன் செல்லும் பரிவாரங்கள் இவர்கள் என்பது நம்பிக்கை.

ஆலமரத்தடியில் மற்றொரு காவல்தெய்வமான ஐயனாரப்பாவுக்கும் சிலை உள்ளது. அவருக்கு முன், பக்தர்கள் வேண்டுதல் நிமித்தம் கொண்டு வரும் வேல்களைச் செருகிவைக்கும் இடம் உண்டு. பட்டவன், பழைய முனியப்பன் சாமி ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.

அதேபோல், முனியப்பனுக்கு உகந்த வன்னி மரத்தடியில் கூடாரம் அமைத்து, பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

மணப்பள்ளி ஸ்ரீதங்க முனியப்பன் கோயில்
மணப்பள்ளி ஸ்ரீதங்க முனியப்பன் கோயில்

மார்கழியில் முனியப்பனுக்கு 10 நாள் விழா கொண்டாடுகிறார்கள். அனைவரையும் காத்தவர் என்பதால், அனைத்துச் சமூக மக்களும் சேர்ந்து இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.

முதல் நாள் காப்புக்கட்டுதல் தொடங்கி, ஒவ்வொரு நாளும் சிறப்புப் பூஜைகள் நடக்கும். முனியப்பனாக சாமி ஆடுபவர் காவிரிக்குச் சென்று நீராடி, வேல்களைக் கழுவி எடுத்து வருவார்.

தொடர்ந்து, கறுப்புச் சட்டை அணிந்து கைகளில் வேல்களைத் தாங்கியபடி, மேள-தாளம் முழங்க ஊருக்குள் வீதியுலா வருவார். வீடுதோறும் வாசலில் வைத்து அவர் பாதங்களுக்கு நீருற்றி, தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். அப்போது சாமியாடி வழங்கும் திருநீறு மகத்துவம் நிறைந்ததாகப் போற்றப்படுகிறது. அதைப் பூசிக்கொண்டால், தீராத வினைகளும் தீரும்; பிணிகள், தோஷங்கள் போன்ற சகலவிதமான பீடைகளும் விலகும் என்பது நம்பிக்கை.

இங்ஙனம் தங்கள் வீடுதேடி வரும் சாமியிடம் மக்கள் மனமுருக வேண்டுதல் வைப்பார்கள். வேண்டுதல் பலித்ததும், மறுவருடம் சாமிக்குத் தங்கச் சங்கிலி, மோதிரம், கறுப்புச்சட்டை, வெள்ளிக்காப்பு, இரும்பு வேல், பித்தளையில் இடைமணி, வெள்ளி ஒட்டியாணம் என்று காணிக்கை செலுத்துவது வழக்கம்.

குறிப்பாக குழந்தைப் பேற்றுக்காகவும், நீதிமன்றங்களில் இருக்கும் தீராத வழக்குகளில் தீர்வு கிடைக்கவும், நோய்நொடிகள் நீங்கவும், கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் விலகிடவும் முனியப்பனிடம் வேண்டுதல் வைத்து வரம்பெறுகிறார்கள்.

தங்க முனியப்பனை வேண்டிக்கொண்டால், நம்முடைய பணக் கஷ்டம், மனக்கஷ்டம் அனைத்தும் விரைவில் விலகும் என்பது நம்பிக்கை.

மணப்பள்ளி ஸ்ரீதங்க முனியப்பன் கோயில்
மணப்பள்ளி ஸ்ரீதங்க முனியப்பன் கோயில்

எக்காரணம் கொண்டும் முனியப்பன் சாமியைப் பட்டினி போட்டுவிடக்கூடாது. மீறினால் வறட்சி ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆகவே, தினமும் ஊரில் எது நடக்கிறதோ இல்லையோ, தவறாமல் முனியப்பனுக்கு மாலை சாற்றி, தேங்காய் உடைத்து, வெண்பொங்கல் படைத்துப் பூஜிக்கிறார்கள்.

வானமே கூரையாக அமர்ந்திருக்கிறார் தங்கமுனியப்ப சாமி. ஆகவே, பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் அவரைத் தரிசித்து வணங்கிச் செல்லலாம். இந்த முனியப்பன் வேல் கொண்டு ஊரைக் காப்பவர் என்பதாலோ என்னவோ, இந்த ஊரில் கத்தி, அரிவாள்கள் செய்யும் பட்டறைகள் அதிகம் இருக்கின்றன.

கேட்ட வரங்களைக் கொடுக்கும் கண்கண்ட தெய்வமாய்த் திகழும் இந்தத் தங்க முனியப்பனை நீங்களும் ஒருமுறை தரிசித்து வாருங்கள்; உங்கள் வாழ்வையும் ஒளிரவைப்பார் தங்கமுனியப்பன்.

வாழ்வில் பிரளயமே வந்தாலும் கவலையில்லை; அபிஷேகத் தேனை உறிஞ்சும் இந்த விநாயகர் சந்நிதிக்கு வாருங்கள்

கும்பகோணத்துக்கு வடமேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில், மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ளது திருப்புறம்பியம். வரலாற்றுச் சிறப்பு மிக்கது இந்தத் தலம். இங்கு நடந்த போரில் முதலாம் ஆதித்த சோழன் வெற்றி பெற்று ... மேலும் பார்க்க

வெளியே சொல்லமுடியாத அளவுக்கு வாழ்க்கை கசக்கிறதா... இந்த கணேசரின் சந்நிதிக்குச் சென்று வாருங்கள்!

திருப்போரூர் முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் தலம் என்பது அனைவரும் அறிந்த தகவல். முருகன் சூரபதுமனோடு வான் வெளியில் இந்தத் தலத்தில் யுத்தம் செய்தார் என்பதாக ஐதிகம். எனவே இங்கே சென்றாலே வாழ்வில் பக... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி கலங்காமல் காத்த விநாயகர்: தீராத பிரச்னைகளும் தீர்க்கும் கணபதி சந்நிதி!

விநாயகர் தலங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்றவை. ஆலயம் எதுவாக இருந்தாலும் அங்கே கணபதி குடியிருப்பார் என்பதை நாம் அறிவோம். ஆனால் சில தலங்களில் அந்த கணபதிக்குத் தனிச்சிறப்பு இருக்கும். அவரைத் தவறாமல் ... மேலும் பார்க்க

திருக்கடவூர் கள்ளவாரண பிள்ளையார்: ஆயுள் விருத்தி அருளும் கணபதி சந்நிதி! விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

திருக்கடவூர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அன்னை அபிராமியும் அப்பன் அமிர்தகடேஸ்வரரும்தான். அதே தலத்தில் அருளும் விநாயகப்பெருமான் மிகவும் முக்கியமானவர். அவரைத்தான் முதலில் வணங்க வேண்டும். மேலும் அவ... மேலும் பார்க்க

கோவை, புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர்: நாகதோஷம் தீரும்... விரைவில் வேண்டுதல் நிறைவேறும்!

விநாயகரை வழிபட்டால் வினைகள் தீரும். எளிமையாக மனம் உருகி அழைத்தாலே ஓடிவந்து காத்திடுபவர் விநாயகர். அதனால்தான் ஊரெங்கும் தெருவுக்குத் தெரு விநாயகர் கோயிலை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். ... மேலும் பார்க்க

திருச்சி பீமநகர் வேணுகோபால சுவாமி திருக்கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் ரோகிணி நட்சத்திர வழிபாடு!

திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் என்று பல்வேறு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர்த்தும் அபல நூறு பழைமையான சிறப்புடைய ஆலயங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று ... மேலும் பார்க்க