செய்திகள் :

நியாயமான வேண்டுதல்களை நிறைவேற்றும் தனுர்வியதிபாத வழிபாடு; எங்கு ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

post image

எவரொருவர் வியதிபாத தினத்தன்று இந்த ஆலயத்திற்கு வந்து மனமுருகி வழிபடுகிறாரோ அவருடைய தோஷத்தினைத் தாமே ஏற்றுக்கொண்டு விடுவதாக இத்தலத்து ஈசனே உறுதிமொழி கொடுத்துள்ளார். 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய வழிபாடு நடைபெற உள்ளது.

வழிபாடு
வழிபாடு

எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவபெருமானைக் குயில் எனும் சிறு பறவை வழிபட்ட சிவ தலங்கள் பல.  இவற்றுள் அம்பிகை பசுவுருவில் சிவபூஜை செய்திட்ட திருக்கோழம்பம் எனப்படும் திருக்குளம்பியமும் ஒன்று. இத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் செய்யப்படும் வியதிபாத வழிபாடு மிகுந்த சிறப்புடையது. குறிப்பாக மார்கழி மாதத்தில் செய்யப்படுகின்ற தனுர்வியதிபாதமானது அதியற்புத பலன்களை அள்ளித் தரவல்லது. இந்த வழிபாடானது  பல ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சி மகாபெரியவர் திருவாய் மலர்ந்தருளிய வண்ணம் இவ்வாலயத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளதும் இங்கே குறிப்பிடத் தக்கது. 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய வழிபாடு நடைபெற உள்ளது.

சந்திரசூரியர்கள் பார்வைக் கலப்பினால் உண்டாவது வியதிபாத யோகம் ஆகும். ஒரு மாதத்திற்கு 27 நட்சத்திரங்கள் அமைவது போல 27 வியதிபாத யோக  நாட்களும்  அமைகின்றன.  யோகம் என்று சொல்லப்பட்டாலும் கூட இந்நாட்கள் பித்ரு வழிபாடுகளுக்கு உரிய தினங்களாகவே அமைகின்றன‌. இக்குறிப்பிட்ட அசுபயோக காலத்தில் பிறந்து விடுபவர்களுக்கு  ஜனனகால ஜாதகத்தில் பித்ரு சாபம், ஸ்த்ரீ சாபம் முதலான தோஷங்கள் ஏற்றப்பட்டு விடுவதும் இயல்பு. இத்தகையவர்கள் எவ்வளவு புண்ணிய காரியங்கள் செய்தாலும் அதற்குரிய பலன்களைக் கூட அனுபவிக்க இயலாமல் வாதனையுடன் தங்கள் வாழ்நாட்களைக் கழிக்கும்படி நேரிடுகிறது. இத்தோஷத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி வியதிபாத வழிபாடு ஒன்றுதான். இத்தகைய வழிபாட்டிற்குரிய தலங்களுள் முதன்மையானது இந்த திருக்கோழம்பம்.

எவரொருவர் வியதிபாத தினத்தன்று இந்த ஆலயத்திற்கு வந்து மனமுருகி வழிபடுகிறாரோ அவருடைய தோஷத்தினைத் தாமே ஏற்றுக்கொண்டு விடுவதாக இத்தலத்து ஈசனே உறுதிமொழி கொடுத்துள்ளார். அதுவும் ஒருமுறை இல்லை.‌"சத்யம்.. சத்யம்..புனஸ் சத்யம்" என்று மூன்று முறைகள் தனது சத்தியவாக்கினை அளித்து இதனைச் சிவபெருமானே உறுதிப் படுத்தியுள்ளார் என்கிறது தலபுராணம்.‌ 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய வழிபாடு நடைபெற உள்ளது.

தனுர்வியதிபாத வழிபாடு

இப்படியாக இங்கு வழிபடுபவர்களின் தோஷங்களை ஏற்றுக்கொள்ளும் பெருமானின் உடல் தகிக்கத் தொடங்கி விடுமாம். இதனைப் போக்குவதற்காக புரட்டாசி மாதத்திய வியதிபாத தினத்தன்று ஆயிரெத்தெட்டு கலசதீர்த்தங்கள் கொண்டு சஹஸ்ரகலசாபிஷேகம் செய்து மூலமூர்த்தியின் உஷ்ணத்தினைத் தணிவிக்கின்றனர்.

தொடர்ந்து மார்கழி மாத மகாவியதிபாத தினத்தன்று செய்யப்படும் மகாபள்ளய சமர்ப்பண வழிபாடும் இத்தலத்திற்கென்றே உரிய பிரத்தியேகச் சிறப்பு பெற்றது. 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய வழிபாடு நடைபெற உள்ளது.

மூலவருக்கு முன்பாக பதினொரு மரக்கால் அன்னமும் பதினொரு விதமான பட்சணங்கள், பதினொரு விதமான கனிகள், ஒரு  பானை இளநீர், ஒரு பானை பானகம், ஒரு பானை நீர்மோர் வைத்து சமர்ப்பணம் செய்கின்றனர்.

ஏனைய வியதிபாத நாட்களில் மூலஸ்தானத்து கோகிலேசப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்யப்படும். ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும் லிங்கமூர்த்திக்கு வழிபாடுகள் கிடையாது. ஏனென்றால் பள்ளயத்து அன்னக்கலயத்தில் அவர் எழுந்தருளி விடுவதாக ஐதீகம். எனவே எல்லா உபச்சார ஆராதனைகளும் இந்த மஹாபள்ளயத்திற்குத்தான் நிகழ்த்தப்படுகின்றன.

இந்த பள்ளயத்தில் உள்ள ஒவ்வொரு அன்னமுமே சிவ சொரூபம் என்பதால் ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான சிவசொரூபத்தினை வழிபடும் புண்ணியம் கிடைத்துவிடுகிறது என்பது இதன் தாத்பரியம். ஒரு வருடத்தில் அனைத்து வியதிபாத நாட்களிலும் வழிபடுவதால் கிடைக்கக் கூடிய

பலனை இந்த ஒரு வழிபாட்டின் மூலமே எளிதாகப் பெற்று விட முடியும் என்பது கூடுதல் விசேஷம்.  இல்லங்களில் சிரார்த்த காலத்தில் நம்முடைய முன்னோர்களை நித்யபித்ருக்களாகச்  வரித்து வசு, ஆதித்ய, ருத்ர ரூபங்களாக பிண்டங்களை இடுகிறோம் இல்லையா? இதில் ஏதெனும் குறைகள் ஏற்பட்டிருந்தால் கூட மேற்சொன்ன வழிபாட்டின் மூலமாகத் தங்களது குறைகள் நீங்கப் பெற்ற அவர்கள் ஈசனின் திருவடிகளை அதாவது சொர்க்கபதத்தினை எளிதில் அடைந்து விடுகிறார்கள். எனவே இந்த அரிய வழிபாட்டினைத் தரிசிப்பவர்களுக்கு பூர்வ ஜென்ம வினைகள் கழிந்து, அளவற்ற  சிவ புண்ணியம் உண்டாவதுடன், முன்னோர்களின் ஆசிகளும் கிடைத்திடும் என்பது உண்மை.

வழிபாடு

பின்னர் நிறைவாக இந்த பிரசாதமானது மகாதவர் ஆராதனை என்கிற பெயரில் அடியார்களுக்கு உணவாக அளிக்கப்பட்டு விடுகிறது. கயைக்கு நிகரான புண்ணியம் தரக்கூடிய இந்த திருக்குளம்பியம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கும்பகோணம் ஆடுதுறைக்கு அருகில் உள்ள S.புதூர் வழியாகவோ அல்லது திருவாவடுதுறை வழியாகவோ இத்தலத்தினை அடையலாம்.

சபரிமலை: நாளை வரை திருவாபரண தரிசனம்... 20-ம் தேதி சாத்தப்படும் நடை!

சபரிமலை ஐய்யப்ப சுவாமி கோயிலில் கடந்த 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.மண்டல கால, மகரவிளக்கு பூஜைகள் வரும் 20-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 19-ம் தேதி இரவு நடை அடைக்கும் வரை பக்தர்கள் தரிசனத்துக... மேலும் பார்க்க

மகரவிளக்கு தரிசிக்க காட்டில் குடியிருக்கும் பக்தர்கள்; ஐயப்ப சுவாமியின் திருவாபரண யாத்திரை! - Album

சபரிமலை: மகரவிளக்கு தரிசிக்க காட்டில் விரி வைத்து பக்தர்கள் தங்கியிருக்கிறார்கள். ஐயப்ப சுவாமிக்கு சார்த்தப்படும் திருவாபரணம் யாத்திரையாக செல்லும் காட்சி. Photo Album மேலும் பார்க்க

கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழா - அக்னி குண்டத்தில் இறங்கிய பக்தர்கள் | Album

கோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத் திருவிழாகோபி குண்டத... மேலும் பார்க்க

”பாதுகாப்பு இல்லாத வனப்பகுதியில் செல்ல வேண்டாம்” – ஐயப்ப பக்தர்களுக்கு போலீஸார் எச்சரிக்கை!

கேரள மாநிலம், பத்தினம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி நாடுமுழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை புரிகிறார்கள். இந்த ஆண்டு... மேலும் பார்க்க

மண்டல பூஜை: சபரிமலை ஐயப்ப சுவாமிக்குச் சாத்தும் தங்க அங்கி ஒப்படைக்கப்பட்ட காட்சி! | Photo Album

சபரிமலை: `தங்கம் கொள்ளை வழக்கில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா?' - அமலாக்கத்துறை விசாரணை மேலும் பார்க்க