செய்திகள் :

நீட் நுழைவுத்தேர்வு: 'அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படுமா?'- அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில்

post image

வினாத்தாள் கசிவு காரணமாக மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்திருந்தது.

இந்நிலையில் ஜூன் 21 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று இன்று (மே. 15) காலை தேசிய முகமைத் தேர்வு அறிவித்தது.

இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

"வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நாளே, மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மறுதேர்வுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது. மாணவர்கள் அவர்கள் தேர்வெழுத விரும்பும் நகரத்தை மீண்டும் தேர்ந்தெடுக்க ஒருவார காலம் அவகாசம் அளிக்க தேசிய முகமைத் தேர்வு முடிவு செய்திருக்கிறது.

மாணவர்களின் வசதிக்காகவும், அவர்களின் நெருக்கடியையும் கருத்தில் கொண்டு தேர்வு நேரத்தை 15 நிமிடங்கள் நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுக்கான நுழைவு அட்டைகள் ஜூன் 14 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்.

மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக மாநில அரசுடன் ஆலோசனை நடத்தப்படும்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இந்த முறை தேர்வெழுதும் மாணவர்களின் போக்குவரத்துச் சிரமத்தைக் குறைக்க நானும் அனைத்து மாநில முதல்வர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.

ஜூன் 21 ஆம் தேதி வானிலை மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் தேசிய முகமைத் தேர்வு பரிசீலித்து வருகிறது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படும். ஓ.எம்.ஆர் தேர்வுத்தாள் முறையைவிட கணினி வழித்தேர்வு முறை ஒப்பீட்டளவில் சிறந்தது" என்று தெரிவித்திருக்கிறார்.

B.Com பட்டப்படிப்போடு CA/CMA: மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் RD கல்லூரி!

+2 தேர்வுகள் முடிந்து முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் அடுத்து என்ன படிக்கலாம் என்ற தேடுதலில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு படிப்புகள் பல உயர் தர க... மேலும் பார்க்க

டிப்ளமோ முடித்தவர்களுக்கு Golden Chance: அண்ணா பல்கலைக்கழகத்தில் இலவச B.E + மாதம் ₹14,500 உதவித்தொகை

பாலிடெக்னிக்கில் டிப்ளமோ முடித்தவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்புக் கல்லூரியில் எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் (HL Mando Anand India Private Limited) உதவியோடு B.E... மேலும் பார்க்க

”உங்கள் மீதான நம்பிக்கையே வெற்றிக்கு வழி வகுக்கும்”- முன்னாள் ஓய்வு பெற்ற காவல் ஆணையர் ரவி பேச்சு!

ஆனந்தவிகடன், கிங்க் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து வழங்கும் ”நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்- UPSC/TNPSC வழிகாட்டி நிகழ்ச்சி” இன்று (26.04.2026) தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்... மேலும் பார்க்க

+2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்? - நாளை சென்னையில் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

கல்வி விகடனும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து நாளை 25.04.2026 சனிக்கிழமை, '+2-வுக்குப் பிறகு என்ன படித்தால் எதிர்காலம்' என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.+2 மு... மேலும் பார்க்க