``2005 உலகக் கோப்பைல 2-ம் இடம் வந்தப்போ ரூ. 1,000 கொடுத்தாங்க" - வைரலாகும் மிதால...
நீண்ட நாள்களாக ஆக்டிவாக இல்லாத கணக்குகள்; வட்டியுடன் பணம் பெறலாம் - RBI சொல்லும் ஈசி வழி!
நீங்கள் ஆரம்பத்தில் தொடங்கிய வங்கிக் கணக்கு, மாணவப் பருவத்தின்போது தொடங்கிய வங்கிக் கணக்கு என உங்களுடைய ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு இப்போது ஆக்டிவாக இல்லாமல் இருக்கலாம். அதில் கொஞ்சம் பணம் இருக்கலாம்.
அந்தப் பணத்தை இப்போது எடுக்க முடியுமா? எடுக்க முடியுமானால், அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கே பார்க்கலாம்.
இரண்டு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை ஆக்டிவாக இல்லாத வங்கிக் கணக்குகள், 10 ஆண்டுகளுக்கு மேல் கோரப்படாமல் இருக்கும் வங்கி டெபாசிட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு (DEA) மாற்றிவிடும்.
அந்தப் பணத்தை நீங்கள் இப்போதும் தாராளமாகப் பெறலாம்.

என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தீர்களோ, அந்த வங்கியின் உங்களுடைய கிளை அல்லது ஏதேனும் ஒரு கிளைக்குச் செல்லுங்கள்.
அந்தக் கிளையில் உங்களுடைய ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் போன்ற ஏதேனும் ஒரு KYC ஆவணங்களைச் சமர்ப்பியுங்கள்.
வங்கி அந்த ஆவணங்களை சரிபார்த்த பின், உங்களுடைய பணம் உங்களுக்கு வட்டியுடன் கொடுக்கப்படும்.
இந்தப் பணத்தை யாரெல்லாம் கோரலாம்?
இந்தப் பணத்தை ஆவணத்தைக் கொடுத்து, நீங்களே சென்று பெறலாம்.
ஆக்டிவாக இல்லாத இறந்தவர்களின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை, அவர்களது நாமினிகள் கோரலாம்.
கோரப்படாத டெபாசிட்டுகள் பற்றி தெரிந்துகொள்ள...
இந்த டெபாசிட்டுகள் குறித்து உங்கள் வங்கியின் இணையதளம் அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் UDGAM இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.
முகாம்களில் கூட...
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரை, இந்தியா முழுவதும் இந்தப் பணத்தை மக்கள் கோருவதற்கான சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கேகூட சென்று, உங்களது பணத்தை பெறுவதற்கான உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.



















