செய்திகள் :

நீலகிரி: ஒற்றை மாணவர் சேர்க்கைகூட நடைபெறாத அரசு தொடக்கப் பள்ளிகள்! - அதிகாரிகள் சொல்வதென்ன?

post image

பழங்குடிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில், முதல் தலைமுறையாக கல்வி பயிலும் மாணவர்களின் ஒரே புகலிடமாக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து வருகின்றனர். அதேவேளையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒற்றை மாணவர் சேர்க்கைகூட நடைபெறவில்லை என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

AI Rep image

இதான் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய நீலகிரி மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள், " இந்த‌ மாவட்டத்தில் 501 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நடப்பு கல்வியாண்டான 2026-27 - ல் தற்போது வரை 1- ம் வகுப்பில் 1,689 மாணவர்களும்,‌ 6- ம் வகுப்பில் 2,749 , 11- ம் வகுப்பில் 2924 மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளனர். கடந்த கல்வியாண்டைக் காட்டிலும் நடப்பு கல்வியாண்டில் 1- ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை மாணவர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 437 ஆக குறைந்திருக்கிறது. குறிப்பாக 28 அரசு பள்ளிகளில் 1- ம் வகுப்பில் புதிதாக சேர்க்கை நடைபெறவில்லை" என்றனர்.

'பராமரிப்பு பணி' ஜூலை 1-ம் தேதி வரை, ஆன்லைனில் PF கிளெய்ம் செய்ய முடியாது!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர் வலைதளம், நிறுவனங்களின் வலைதளம், UMANG ஆப் ஆகியவை ஐந்து நாள்களுக்கு தற்காலிகமாக வேலை செய்யாது என்று EPFO அறிவித்துள்ளது. என்ன காரணம்? கணினி மேம்பாட்டு... மேலும் பார்க்க

கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியில் பின்தங்கும் இந்தியா... நிதி ஆயோக் எச்சரிக்கை, செவிசாய்க்குமா அரசு?

வேகமாக வளரும் பொருளாதாரம், டிஜிட்டல் புரட்சி, வேறெந்த நாட்டிலும் இல்லாத மிகப்பெரும் இளைஞர் வளம் என்று நாம் பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி களில்... மேலும் பார்க்க

'இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தாலும், சாதகம் இல்லை' - காரணம் அமெரிக்காவா?

ஈரான் போரின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96-ஐ எல்லாம் தாண்டிச் சென்றது.ஆனால், கடந்த ஒரு வாரமாக, இந்திய ரூபாய் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து, ரூ.94-95-க்கு இடையே வர்த்தகமாகி வருகிறது. இதற்கு மிக முக... மேலும் பார்க்க

மதுபாட்டில், மோசமான உணவு: புகார்களை அடுக்கிய மாணவர்கள் - தன் போன் நம்பரை கொடுத்துச் சென்ற அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மொத்தம் 2... மேலும் பார்க்க

"வில்லங்க சான்றிதழில் நில அளவை எண், கதவு எண் வழங்க வேண்டும்"- பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் குமார் துகார் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “போலி ஆவணப் பதிவுகளைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு சட்ட, நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறது... மேலும் பார்க்க

அழுகும் நெல்மணிகள் : `தற்காலிகத் தீர்வுகள் விடிவு தராது' - நிரந்தர தீர்வை தருமா புதிய அரசு?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரர் பகுதியில் கடந்த வாரம் இடி, மின்னலுடன் பெய்த மழையால் திறந்த வெளியில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 50,000 நெல் மூட்டைகள் தண்ணீரில் மூழ்கி ... மேலும் பார்க்க