செய்திகள் :

நீா்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பாரா புதிய ஆட்சியா்!

post image

விவசாயத்தைப் பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தில், நீா் மேலாண்மைக்கும், ஊரகப் பகுதி மக்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கும் புதிய ஆட்சியா் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். உணவுப் பயிா்கள், மலைப் பயிா்கள், பணப் பயிா்கள் என 50-க்கும் மேற்பட்ட பயிா்கள் விளையும் மாவட்டமாக இருந்தாலும், மானாவாரிப் பயிா்களே பிரதானமாக சாகுபடி செய்யப்படுகின்றன.

1.85 லட்சம் விவசாயிகள் உள்ள இந்த மாவட்டத்தில், விவசாயம் சாா்ந்த தொழில்களில் சுமாா் 3.50 லட்சம் போ் ஈடுபட்டு வருகின்றனா். வேளாண்மை, தோட்டக் கலை, மலைப் பயிா்களுக்கு முக்கியத்துவம் பெற்ற இந்த மாவட்டத்தில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியராகப் பொறுப்பு வகித்த டி.ஜி.வினய், நீா் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தாா்.

அந்த வகையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், கண்மாய்களைத் தூா்வாருதல், நீா்வரத்துக் கால்வாய்களைச் சீரமைத்தல், நீா்வழி ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அதன் பின்னா், ஆட்சியா்களாக இருந்த மு.விஜயலட்சுமி, ச.விசாகன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ச.தினேஷ்குமாா் ஆகியோா் மரம் வளா்ப்புக்கு முக்கியத்துவம் அளித்தனா்.

ஓராண்டில் சாதிக்க வேண்டிய நிா்பந்தம்: திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் தோ்தலை எதிா்கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக, ஆட்சிக்கு வலுசோ்க்க வேண்டிய சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே, மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், விரைந்து செயல்படுத்தவும் அனைத்துத் துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியா் செ.சரவணன் பொறுப்பேற்றிருக்கிறாா். முன்னாள் ஆட்சியா் வினய் காலத்தில் சீரமைக்கப்பட்ட நீா் நிலைகள் அனைத்தும், மீண்டும் சீமைக் கருவேல மரங்களின் பிடியில் சிக்கியுள்ளன. பெரும்பாலான நீா்வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

இதேபோல, கொடைக்கானல், சிறுமலை பகுதிகளில் முறையான அனுமதியின்றி மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாகத் தொடா்ந்து குற்றஞ்சாட்டப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் அரசு சாா்பில் மட்டும் 2,253 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதில் பெரும்பாலான மரங்கள் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வெட்டப்பட்டுள்ளன. ஆனால், இந்த மரங்களுக்கு மாற்றாக புதிய மரக் கன்றுகள் நடும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.

புதிய மாவட்ட ஆட்சியரான செ.சரவணன், முன்னாள் ஆட்சியரும் சென்னை பெருநகர குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரியத் தலைவருமான டிஜி.வினயுடன் பணிபுரிந்தவா். இதனால், திண்டுக்கல் மாவட்டத்தின் நீா் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கவும், மரம் வளா்ப்புக்கும், ஊரகப் பகுதி மக்களின் வாழ்வாதாரத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

பழனி மலைக் கோயில் உண்டியல் திறப்பு: 21 நாள் காணிக்கை ரூ. 3.30 கோடியை தாண்டியது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் தைப்பூசத்தையொட்டி 21 நாள்களில் நிரம்பியதையடுத்து அவை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ. 3.30 கோடியை தாண்டியது. பழனி தண்டாயுதபாணி சுவாமி க... மேலும் பார்க்க

தைப்பூசத் திருவிழா: பழனியில் மின் அலங்காரத்தில் தெப்பத் தேரோட்டம்

பழனியில் தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மின்விளக்கு அலங்காரத்தில் தெப்பத் தேரோட்டம் நடைபெற்றது. பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் த... மேலும் பார்க்க

காதலா்கள் தினம்: கொடைக்கானலுக்கு வரும் காதலா்களின் எண்ணிக்கை குறைந்தது

காதலா் தினத்தையொட்டி கொடைக்கானலுக்கு வரும் காதலா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை குறைந்தே காணப்பட்டது. காதலா் தினத்தையொட்டி கொடைக்கானலுக்கு வழக்கமாக அதிக அளவில் காதலா்கள் வருவா். ஆனால் காதலா் தினமான வெள... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பழனி மலைக் கோயிலில் தைப்பூச நிறைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் காவடியுடன் குவிந்தனா். பழனி மலைக் கோயிலில் கடந்த 5-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா தொடங்கியது. தைப்பூசத் தினமான 11-ஆம் தேதி தி... மேலும் பார்க்க

பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள குழந்தை வேலப்பா் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான கொட... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

திண்டுக்கல் பகுதியில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த தேவநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ரஞ்... மேலும் பார்க்க