செய்திகள் :

'நோ' கொத்துக் கொத்தாகப் பணம்; 'நோ' அணு ஆயுதத் தயாரிப்பு! - ட்ரம்ப் சொல்லும் ஒப்பந்தத்தின் Outline

post image

'ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது' என்று நேற்று முன்தினம் உலக நாடுகளுக்கு 'குட் நியூஸ்' கொடுத்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ஈரானும் தங்களிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதாக ஒப்புக்கொண்டு விட்டதாக தகவல்களும் நேற்று வெளியாகின.

இந்த நிலையில், ட்ரம்ப் ஈரான் உடனான தன்னுடைய ஒப்பந்தம் எப்படி இருக்கும் என்கிற அவுட்லைனை தனது ட்ரூத் பக்கத்தில் கூறியுள்ளார்.
ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

"நான் ஈரானுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டால், அது மிகவும் சரியானதாகவும், தரமானதாகவும் இருக்கும்.

ஈரானுக்குக் கொத்துக் கொத்தாகப் பணத்தை வாரிக்கொடுத்து, அவர்கள் அணு ஆயுதத் தயாரிப்பை நோக்கித் தங்குதடையின்றிச் செல்வதற்குக் கம்பளம் விரித்துக் கொடுத்தாரே ஒபாமா, அவரைப் போல ஒரு மோசமான உடன்படிக்கையை நான் செய்ய மாட்டேன்.

நம்முடைய உடன்படிக்கை அதற்கு நேர் எதிரானது. ஆனால் அதை இன்னும் யாரும் பார்க்கவும் இல்லை, அது என்னவென்று யாருக்கும் தெரியவும் தெரியாது.

இன்னும் சொல்லப்போனால், அதன் பேச்சுவார்த்தைகளே இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

அதனால், தங்களுக்கு ஒன்றுமே தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி சும்மா குறை சொல்லிக்கொண்டிருக்கும் இந்த லூசர்ஸ் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.

அவர்கள் சொல்வதைக் கேட்கவும் செய்யாதீர்கள். எனக்கு முன்னால் பதவியில் இருந்து, இந்த அத்தனை பிரச்னைகளையும் பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்த்திருக்க வேண்டியவர்களைப் போல, நான் எப்போதும் தப்பான உடன்படிக்கைகளைச் செய்ய மாட்டேன்!" என பதிவிட்டிருக்கிறார்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க