கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம் | Photo Al...
பஞ்சாப்: நண்பரிடம் ரூ.500 கடன் வாங்கி லாட்டரி; காய்கறி வியாபாரிக்குக் கிடைத்த ரூ. 11 கோடி பரிசு
ராஜஸ்தான் மாநில வியாபாரி ஒருவருக்கு லாட்டரியில் ரூ.11 கோடி கிடைத்து இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் அமித் செஹ்ரா. காய்கறி வியாபாரியான அமித், பஞ்சாப் மாநில லாட்டரி வாங்க அமித்திடம் பணம் இல்லை. அந்நேரம் அவரது நண்பர் அவருடன் இருந்தார். அவரிடம் ரூ.500 கடன் வாங்கி சில லாட்டரி சீட்டுக்களை வாங்கினார்.
அமித்திடம் மொபைல் போன் கூட அதிகமாகப் பயன்படுத்த மாட்டார். லாட்டரியில் பரிசு விழுந்திருக்கிறதா என்று பார்க்கவும் தெரியாது. லாட்டரி சீட்டுகளை வாங்கி வீட்டில் வைத்துவிட்டார். திடீரென பஞ்சாப் லாட்டரி துறையில் இருந்து அமித் வீட்டிற்கு போன் செய்து, அமித் வாங்கிய லாட்டரிக்கு ரூ.11 கோடி பரிசு விழுந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

அதனை அமித் ஆரம்பத்தில் நம்பவில்லை. அதன் பிறகு அவர்கள் எடுத்துச் சொன்னவுடன் அவரால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இது குறித்து அமித் கூறுகையில், "லாட்டரி முடிவுகளை எனக்கு பார்க்கக் கூட தெரியாது. ஆனால் திடீரென எனக்கு லாட்டரி ஏஜென்சியிடமிருந்து போன் வந்தது. அவர்கள் எனக்கு ரூ.11 கோடி பரிசு கிடைத்திருப்பதாகச் சொன்னபோது அதனை என்னால் நம்ப முடியவில்லை.
அவர்கள் எனது வீட்டிற்கு வந்து பரிசு பணத்தை எப்படி வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் லாட்டரி வாங்குவது இதுதான் முதல் முறை. என்னிடம் லாட்டரி வாங்க பணமும் இல்லை. எனவே எனது நண்பன் முகேஷிடம் 500 ரூபாய் வாங்கித்தான் லாட்டரியே வாங்கினேன்.
எனவே எனக்கு லாட்டரி வாங்க ரூ.500 கடன் கொடுத்த எனது நண்பணின் இரண்டு மகள்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அவர்களுக்குக் கொடுத்த பிறகுதான் அடுத்து பணத்தை என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்'' என்று தெரிவித்தார். அமித் பரிசு பணத்தை வாங்க சண்டிகர் சென்றுள்ளார்.
















