செய்திகள் :

பஞ்சாப்: மணமகள் மீது ரூ.8.5 கோடியை மழையாக பொழிந்தார்களா உறவினர்கள்? - வைரல் வீடியோவின் பின்னணி!

post image

திருமணம் என்றாலே உறவினர்கள் பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள். பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் என்ற இடத்தில் நடந்த திருமணத்தில் உறவினர்கள் மணமகள் மீது பணமழை பொழிந்த வீடியோ வைரலாகி இருக்கிறது.

திருமணத்தில் உறவினர்கள் ஆடல், பாடலுடன் உற்சாகமாக இருந்தனர். அந்நேரம் மணப்பெண் மீது உறவினர்கள் பணத்தை மழையாக பொழிந்தனர். இதனால் மணப்பெண் நின்ற இடத்தில் தரை முழுக்க பணமாக கொட்டிக்கிடந்தது. மணப்பெண்ணின் உறவினர்கள் அனைவரும் மணப்பெண் மீது பணத்தை மேல் நோக்கி தூக்கிப்போட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது.

இத்திருமணத்தில் ரூ.8.5 கோடி பணம் மணப்பெண் மீது மழையாக பொழியப்பட்டது என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இச்செய்தியை மணமகன் வீட்டார் மறுத்துள்ளனர். இது குறித்து மணமகனின் சகோதரர் சிக்கந்தர் சிங் வெளியிட்டுள்ள விளக்கத்தில்,'' மணப்பெண் மீது பணமழை பொழிந்தது உண்மைதான். ஆனால் சமூக வலைத்தளதில் குறிப்பிடுவது போன்று அந்த அளவுக்கு பணம் பயன்படுத்தப்படவில்லை.

எனது சகோதரர் ஆஸ்திரேலியாவில் லாரி பிஸ்னஸ் செய்கிறார். எனவே திருமணத்தில் பணமழை பொழிந்தோம். ஆனால் சமூக வலைத்தளத்தில் குறிப்பிடுவது போன்று இதற்கு கோடிக்கணக்கான பணம் பயன்படுத்தப்படவில்லை. வெறும் ரூ.2 லட்சம் மட்டும்தான் பயன்படுத்தினோம்'' என்று குறிப்பிட்டார்.

திருமண ஒருங்கிணைப்பு மேலாளர் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ''மணமகள் மீது ரூ. 8.5 கோடி பணம் போடப்படவில்லை. வெளிநாட்டு டாலர் உட்பட மொத்தம் ரூ.4 லட்சம் தான் இதற்காக பயன்படுத்தப்பட்டது. எப்படி இதற்கு கோடிக்கணக்கில் செலவிடப்பட்டது என்று செய்தி வெளியானது என்று தெரியவில்லை''''என்றார்.

மணமகள் குடும்பம் தரப்பில் விளக்கம் கொடுத்துள்ள போதிலும் மணமகள் மீது பணமழை பொழிந்த வீடியோ தொடர்ந்து வைரலாகி வருகிறது.

Lost 140,000 Followers: அம்பலமான உண்மை முகம்! - லட்சக்கணக்கான ஃபாலோயர்களை இழந்த சீன இன்ஃப்ளூயன்சர்?

ஒரு சீன இன்ஃப்ளூயன்சர் தனது ரசிகர்களுடன் நேரலையில் (Livestream) பேசிக்கொண்டிருக்கும் போது, இத்தனை நாளாக அவர் பயன்படுத்திய `பியூட்டி ஃபில்டர்' திடீரென வேலை செய்யாமல் போனது. இதனால் சில வினாடிகளுக்கு அவர... மேலும் பார்க்க

ஆப்கன்: எலும்பு முறிய கூடாது, காயம் தெரியகூடாது!- பெண்களை அடிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய தாலிபான்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தாலிபான் அரசு பெண்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. படிப்பதற்கு கூட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தனியாக வெளியில் செல்ல... மேலும் பார்க்க

ஏஐ மாநாட்டில் சீன நாய் ரோபோ; வைரலான பேராசிரியர்; மன்னிப்புக் கேட்ட பல்கலைக்கழகம்; என்ன நடந்தது?

டெல்லியில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.டி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கடைகளை அமைத்து அதில் தங்களது தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளன. இதில் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த க... மேலும் பார்க்க

"பிள்ளைகளின் படிப்புக்காகத்தான்" - மணியடித்தவுடன் மொபைல், டிவி ஆஃப்; வைரலாகும் மகாராஷ்டிரக் கிராமம்!

மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு சிறார்கள் அனைவரின் கையிலும் மொபைல் போனைப் பார்க்க முடிகிறது. இதனால் அவர்களது படிப்புக்கு மொபைல் போன்கள் தடையாக இருக்கின்றன.போன் பார்க்காமல் குழந்தைகள் படித்து... மேலும் பார்க்க

விஐடி பல்கலைக்கழகத்தில் ஜிஎஸ்டி வரி விழிப்புணர்வு மாநாடு!

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் வேலூர் கிளை சார்பில், “ஜிஎஸ்டி விதிமுறைகளை கையாளுதல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்ட... மேலும் பார்க்க

சிதைந்த மில்லியன் டாலர் கனவு; ரீல்ஸ் மோகத்தில் கார் ஏற்றிக் கொன்ற சிறுவன்; தாயின் தீராத வேதனை!

டெல்லி துவாரகா பகுதியில் நடந்த கோரமான கார் விபத்து, ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதைத்துள்ளது. 23 வயதான சாஹில் தனேஸ்ராஎன்ற இளைஞர், சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த ஸ்கார்பியோ கார் மோதி உயிரி... மேலும் பார்க்க