சென்செக்ஸ் 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை! 23,700 புள்ளிகளில் நிஃப்டி!
பட்ஜெட்: பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு!
பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் பத்திரப்பதிவுக் கட்டணத்தில் 1% குறைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மாா்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர்,
"ரூ. 10 லட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துகளைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைக்கப்படும்.
மகளிர் தொழில் முனைவோரை உருவாக்க நடவடிக்கை. சுமார் 1 லட்சம் மகளிரைத் தொழில் முனைவோராக உயர்த்திடும் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதையும் படிக்க | மகளிருக்கான அறிவிப்புகள்! மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன்!
2025-26 நிதியாண்டில் ரூ. 3.31 லட்சம் கோடியாக வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் வருவாய் திருத்த மதிப்பீடுகளைவிட 12.81% அதிகம்.
வருவாய் பற்றாக்குறை 3.2 சதவிகிதத்தில் இருந்து 1.17 சதவிகிதமாக குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
செலவினங்களைப் பொருத்தவரை 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.3.73 லட்சம் கோடியாக மதிப்பீடு. இது கடந்த நிதியாண்டின் செலவின திருத்த மதிப்பீடுகளைவிட 9.65% அதிகம்" என்று பேசியுள்ளார்.