சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 900 புள்ளிகள் வீழ்ச்சி!
பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிப்பு: தீயணைப்புத் துறை
சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு வெடித்ததில் தமிழகம் முழுவதும் சிறிய பட்டாசு விபத்துகளால் 304 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளித் திருநாளான வியாழக்கிழமை(அக்.31) மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட சிறிய பட்டாசு விபத்துகளால் 304 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பட்டாசு இல்லாமல் பிற காரணங்களால் 31 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க |தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேருக்கு மத்திய அரசின் சிறப்பு விருது அறிவிப்பு
பட்டாசு விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டறைக்கு பொதுமக்களிடம் இருந்து 128 அழைப்புகள் வந்துள்ளன. பட்டாசு வெடித்ததில் தீ விபத்து தொடர்பாக 97 அழைப்புகள் வந்துள்ளன என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட 17 விபத்துகள் நிகழ்ந்து 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.