செய்திகள் :

Damien Martyn: கோமாவில் டேமியன் மார்ட்டின்; ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு என்ன ஆனது?

post image

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின் (54), உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார்.

டேமியன் மார்ட்டின் 1992-ல் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டியின்போது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். நேர்த்தியான பேட்டிங்காகப் புகழப்படும் டேமியன் மார்ட்டின் ஆஸ்திரேலியாவுக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

டேமியன் மார்ட்டின்
டேமியன் மார்ட்டின்

இந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டேமியன் மார்ட்டின் வீட்டில் ஓய்வில் இருந்தார். டிசம்பர் 26 அன்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் பிரிஸ்பேனில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மூளைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து, மருத்துவர்களால் அவர் கோமா நிலையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்.

இது தொடர்பாகப் பேசிய டேமியன் மார்ட்டினின் நெருங்கிய நண்பரான முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட், ``மார்ட்டின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் தலைமைச் செயல் அதிகாரி டாட் கிரீன்பெர்க், ``டேமியனின் உடல்நலக்குறைவு பற்றிக் கேட்டு நான் வருத்தமடைந்தேன். கிரிக்கெட் சமூகத்தில் உள்ள அனைவரும் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள்" என்றார்.

1990-களின் பிற்பகுதி முதல் 2000-கள் வரையிலான ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டில், அந்த அணியின் முக்கிய அங்கமாக இருந்தவர் மார்ட்டின். 1999 மற்றும் 2003-ல் ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றது. அப்போது மார்ட்டின் அந்த அணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay Hazare Trophy: வரலாற்று சாதனை படைத்த பீகார் அணி; மாஸ் காட்டிய சூர்யவன்ஷி

விஜய் ஹசாரே கோப்பையின் 33ஆவது சீசன் இன்று (டிச.24) அகமதாபாத்தில் தொடங்கியது. ஜனவரி 18ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடரில... மேலும் பார்க்க

"நான் புல்லட் புரூஃப் கார் வச்சிருக்கேன், ஏன்னா..!"- ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் தன்னிடம் புல்லட் புரூஃப் கார் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். கிரிட்கெட்டில் முன்னணி வீரர்களுள் ஒருவராக வலம் வருபவர் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான். ரஷீத் கான்தனது சொந... மேலும் பார்க்க

Rohit: "கிரிக்கெட்டையே விடலாம்னு நினைச்சேன், ஏன்னா..."- 2023 உலகக்கோப்பை குறித்து ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா ஹரியானா மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரோஹித் 2023 உலகக்கோப்பை தோல்வி குறித்துப் பகிர்ந்திருக்கிறார். ... மேலும் பார்க்க

T20 WC: "மகிழ்ச்சியாக இருக்கிறது; அணியை சரியாக தேர்வு செய்திருக்கிறோம்"- கேப்டன் சூர்யகுமார் யாதவ்

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அற... மேலும் பார்க்க

T20 WC: `அவரின் தரம் குறித்து எல்லோருக்கும் தெரியும்; ஆனால்..!'- கில் இடம்பெறாதது குறித்து அகர்கர்

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அற... மேலும் பார்க்க

T20 World Cup: கில் OUT; சஞ்சு சாம்சன் IN - வெளியானது உலகக் கோப்பைக்கான இந்திய அணி

கடந்த ஆண்டு நடைபெற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அறிவ... மேலும் பார்க்க