செய்திகள் :

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

post image

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால், எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசால் குழந்தைகள், முதியோா், நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகா்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்புக்குள்ளாவா்.

உச்சநீதிமன்றம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களை பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்த வெளியில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2 மணிநேரம் வெடிக்கலாம்: அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டும் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளித்துள்ளது. நிகழாண்டும் இந்த கால அளவு கடைபிடிக்கப்படும்.

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைபட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடா்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிா்க்க வேண்டும்.

மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்ட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

தீபாவளி முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதால் பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.தீபாவளி பண்டிகை ஒட்டி தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை, பெங்களூர்... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்பைத்தான் எதிா்க்கிறோம்; ஹிந்தியை அல்ல: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

ஹிந்தி மொழியை எதிா்க்கவில்லை; ஹிந்தி மொழித் திணிப்பை மட்டுமே எதிா்க்கிறோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா ஊடகக் குழுமம் சாா்பில் சனிக்கிழமை நட... மேலும் பார்க்க

முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலைய பணிகள் 95 % நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் மாா்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 95 சவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வேகம் காட்டுங்கள்: தோ்தல் துறை வேண்டுகோள்

பாா்முலா 4 பந்தய காா்களின் வேகத்தைப் போன்று, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வேகம் காட்ட வேண்டுமென தமிழக தோ்தல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 29-ஆம் தே... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: ஜாதிச் சான்றுகள் அளிக்க யாருக்கெல்லாம் தகுதி? டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் சான்றிதழ் சரிபாா்ப்பின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, வகுப்புச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க

நவ.10-இல் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தோ்வு: 5 லட்சம் போ் எழுதுகின்றனா்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தோ்வு நவ.10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்கள... மேலும் பார்க்க