TVK: விஜய்யின் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் | Photo Album
பயணப்படிக்கு விண்ணப்பம் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்; ஆபாச படங்கள் அனுப்பிய எஸ்.பி அலுவலக பணியாளர் கைது
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு வந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான முருகன். அரசின் நிரந்தர பணியாளரான இவர், காவலர்களுக்கான பயணப்படி பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில், வழக்கு தொடர்பாக வெளியூர் சென்று வந்த பெண் ஆய்வாளர் ஒருவர் பயணப்படிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முருகனிடம் கொடுத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், அன்றைய தினம் இரவு புதிய செல்போன் எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஆய்வாளர், சம்பந்தப்பட்ட எண் குறித்து புகார் அளித்திருக்கிறார்.
காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் பணியாற்றி வந்த முருகனின் எண் என்பதைக் கண்டறிந்துள்ளனர். ஆபாச வீடியோக்களை முருகன் அனுப்பியதை உறுதி செய்த காவல்துறையினர், முருகன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பிண்ணனி குறித்து தெரிவித்த காவல்துறையினர், " டிராவல் அலவன்ஸ் விண்ணப்பத்தில் சம்மந்தப்பட்ட லேடி இன்ஸ்பெக்டர் தன்னுடைய செல்போன் எண்ணை எழுதியிருக்கிறார். இதை கவனித்த முருகன், எண்ணை செல்போனில் ஏற்றி வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியிருக்கிறார். இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.



















