செய்திகள் :

பரந்தூர்: ``இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது?" - அண்ணாமலை கேள்வி

post image

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து பேச திமுக அனுமதி கேட்டது. திட்டம் ரத்து செய்யப்பட்டதால் பேச எதுவும் இல்லை என சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால் திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், ``இன்று தமிழகச் சட்டமன்றத்தில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட அரசு முடிவு செய்துள்ளதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மாற்று இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், சென்னைக்கான 2-வது விமான நிலையத்திற்குப் புதிய இடத்தை உடனடியாகப் பரிந்துரைத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். ஏனெனில், இந்த இடத்தைத் தேர்வு செய்வதில் ஏற்படும் தாமதம், மாநிலத்தின் வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும்.

விமான நிலையம் அமையவிருந்த பரந்தூர் கிராமம்

பரந்தூர் திட்டத்தைக் கைவிடும் இந்த அறிவிப்பால் ஏற்படும் வாய்ப்பு இழப்புகளை அரசு கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். அரசு உடனடியாக மற்றொரு இடத்தை முடிவு செய்தாலும்கூட, இடத்தைத் தேர்வு செய்து, மத்திய அரசின் ஒப்புதல் பெற்று, டெண்டர் விட்டு, நிலத்தைக் கையகப்படுத்தி, அனைத்து உரிமங்களையும் பெற்று விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள் மற்ற மாநிலங்கள் வளர்ச்சியில் நம்மை விட வெகுதூரம் முன்னேறிவிடும்.

முதலில், தற்போதைய சென்னை விமான நிலையம் இன்றைய தேவைகளுக்கே போதுமானதாக இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நிலப்பரப்பை ஒப்பிட்டுப் பார்த்தால்

  • சென்னை: ~1,300 ஏக்கர்

  • ஹைதராபாத்: ~5,500 ஏக்கர்

  • பெங்களூரு: ~4,000 ஏக்கர்

  • டெல்லி: ~5,100 ஏக்கர்

  • நவி மும்பை: ~2,866 ஏக்கர்

இவ்வளவு சிறிய இடத்தில் அமைந்திருக்கும் சென்னை விமான நிலையத்தில் பயணியர் சேவை சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால், வருகை பகுதியில் இறங்கி உள்ளூர் போக்குவரத்தைப் பிடிப்பதே இன்று மிகப்பெரிய சிரமமாக உள்ளது.

ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் நுழைவுவாயிலாகச் சென்னை இருந்தது. ஆனால் இன்று, ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் திறனுடன், பயணிப் போக்குவரத்தில் சென்னை 5-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்கள் சென்னைக்கு முன்னே உள்ளன. மேலும், டாக்சிவே (Taxiways) மற்றும் ஏரோபிரிட்ஜ் (Aerobridges) வசதிகள் குறைவாக இருப்பதால், ஏ380 (A380) போன்ற மிகப்பெரிய விமானங்கள் தரையிறங்கும் 'கோட் எஃப்' (Code F) தகுதி சென்னைக்கு இல்லை. ஆனால், தெற்கில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களால் இத்தகைய பெரிய விமானங்களைக் கையாள முடிகிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டு, சென்னைக்கான 2-வது விமான நிலையத்திற்கான இடத்தை அடையாளம் காணும் பணியைத் தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் வரலாம், போகலாம். ஆட்சிகள் மாறலாம். ஆனால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்போது, அன்றைய ஆட்சியாளர்களின் தொலைநோக்குப் பார்வையின்மையால், ஒரு தரம் குறைந்த கட்டிடத்தையே "விமான நிலையம்" என்று சொல்லிக் கொண்டு மக்கள் சிரமப்படும் நிலை வரக்கூடாது.

அத்துடன், பரந்தூர் திட்டத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு இனி என்ன செய்யப் போகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க