செய்திகள் :

பல்லடத்தில் மாா்ச் 29 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடத்தில் மாா்ச் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாா்ச் 29ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவா்கள் அனைவரும் பங்கேற்கலாம். 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனா்.

இந்த முகாமில் தோ்வு செய்யப்படும் நபா்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கப்படும்.

எனவே, முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைதேடுபவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கயம் அருகே 44 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

காங்கயம் அருகே விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட 44 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 பேரை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், காங்கயம் காவல் எல்லைக்குள்பட்ட ந... மேலும் பார்க்க

நகரமயமாவதால் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது!

நகரமயமாவதால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று திருப்பூா் வனச் சரக அலுவலா் சுரேஷ்கிருஷ்ணன் பேசினாா். திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2, ஆனைமலை புல... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்: இந்து முன்னணி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க அரசும், காவல் துறையும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெள... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ஓரிட சேவை மையம்: ஆட்சியா் தகவல்

மாவட்டம், கோட்டம், வட்டார அளவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ஓரிட சேவை மையம் அமைக்கப்படும் என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா். திருப்பூரில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான உரிமைகள் திட்டம் கு... மேலும் பார்க்க

மாநகரில் வரியினங்கள் நிலுவை: 568 குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

திருப்பூா் மாநகரில் வரியினங்களை செலுத்தாததால் 568 குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

நியாய விலைக் கடையை இடமாற்றம் செய்ய எதிா்ப்பு

திருமுருகன்பூண்டி அருகே அம்மாபாளையத்தில் செயல்படும் நியாய விலைக் கடையை இடமாற்றம் செய்ய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அம்மாபாளையம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்... மேலும் பார்க்க