செய்திகள் :

பல விதமான கடனில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள்; விடுபடும் வழிதான் என்ன? NRI Corner - 8

post image

கடன் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எல்லாவற்றையும் நாம் பணம் சேர்த்தே வாங்க வேண்டும் எனில், பல விஷயங்களை நம்மால் வாங்க முடியாமலே போய்விடும். உதாரணமாக, ஒரு கல்லூரியில் படிப்பதற்குத் தேவைப்படும் பணம் நம்மிடம் இல்லை என்றால், அதைக் கடனாக வாங்கி, அந்தப் படிப்பைப் படிப்பதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால், இன்றைக்கு வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் என்ன மாதிரியான கடனை வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால், நகைக் கடன், பர்சனல் லோன், கார் கடன், வீட்டுக் கடன் எனப் பல வகையான கடன்களை வைத்திருக்கவே செய்கிறார்கள். இதில் வீட்டுக்கடன் போன்ற நீண்ட காலக் கடன் மூலம் வாங்கும் சொத்தின் மதிப்பு உயரும் என்பதால், அவற்றின் மதிப்புஅதிகரிக்கும்; அதனால் அந்தக் கடன் நல்ல கடன் என்றே சொல்லலாம். ஆனால், மற்ற வகைக் கடன்கள்?

debt

உதாரணமாக, நகைக் கடன், பர்சனல் லோன், கார் கடன் போன்றவற்றினால், நமது சொத்து மதிப்பு பெரிதாக உயராது என்பதுடன், நம் வாழ்க்கைத் தரமானது தாழ்ந்துகொண்டேபோகும் என்பது நிச்சயம். எனவே, வெளிநாடுகளில் வசிப்பவராக இருந்தாலும் சரி, இந்தியாவில் இருப்பவராக இருந்தாலும் சரி, எந்த வகையிலும் கடன் இல்லாத ஒரு நிலையில் இருந்தால்,வாழ்க்கையில் அடுத்தடுத்து முன்னேறி, பெரும் பணத்தை நம்மால் சேர்க்க முடியும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்? கடனை ஒழித்துக்கட்ட ஒருவர் செய்ய வேண்டிய விஷயங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலில், நம்மிடம் இருக்கும் கடன்கள் என்னென்ன என்பதை வரியாக எழுதிக் கொள்ள வேண்டும். உதாரணமாக, 1) நகைக் கடன், 2) பர்சனல் லோன் 3) கார் கடன் என ஒவ்வொரு கடனையும் எழுதிக்கொள்ளுங்கள்.

அடுத்து, ஒவ்வொரு கடனுக்கும் எவ்வளவு பணம் திரும்பக் கட்ட வேண்டியிருக்கிறது என்பதை எழுதிக்கொள்ளுங்கள். உதாரணமாக, 1) நகைக் கடன் - ரூ.5.50 லட்சம், 2) பர்சனல் லோன் - ரூ.8.00 லட்சம், 3) கார் கடன் - ரூ.6 லட்சம் என்று எழுதிக் கொள்ளுங்கள்.

மூன்றாவதாக, இந்தக் கடன்களுக்கு எவ்வளவு வட்டி என்பதை எழுதுங்கள். உதாரணமாக, உதாரணமாக, 1) நகைக் கடன் - 12%, 2) பர்சனல் லோன் - 10% 3) கார் கடன் - 9% எனக் குறித்துக்கொள்ளுங்கள்.

நான்காவதாக, அதிகமான வட்டி விகிதம் இருக்கும் கடனுக்கு அதிக தொகையைக் கட்ட வேண்டும். உதாரணமாக, நகைக் கடனுக்கு 12% வட்டி கட்ட வேண்டும். அந்தக் கடனுக்குக் குறைவான பணத்தைத் திரும்பக் கட்டினால், நீண்ட காலம் பணம் கட்ட வேண்டியிருக்கும்! ஆனால், கூடுதலான தொகையைக் கட்டுவதன் மூலம் இந்தக் கடனுக்கான பணத்தை முழுவதுமாகக் கட்டி, அந்தக் கடனில் இருந்து விரைவிலேயே மீண்டுவர முடியும்.

அதே சமயம், குறைந்த வட்டி கொண்ட கடன்களுக்கான பணத்தைத் திரும்பக் கட்டாமல் இருந்துவிடக் கூடாது! அதிலும் முடிந்த அளவுக்கான பணத்தைத் திரும்பக் கட்டிக்கொண்டே இருக்கவேண்டும். அதிக வட்டியில் கடனை முழுவதுமாகத் திரும்பக் கட்டி முடித்ததுடன், அதற்கு அடுத்தபடியாக உள்ள வட்டி விகிதத்தில் இருக்கும் கடனுக்கு அதிக தொகை கட்டி முடிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு கடனையும் கச்சிதமாகத் திட்டமிட்டுக் கட்டினால், அடுத்த சில ஆண்டுகளில் கடனே இல்லாத ஒரு நிலை அடைவது எல்லோருக்குமே சாத்தியம்தான்!

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி தெரிந்துகொள்ள இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள பின்வரும் லிங்கினை சொடுக்கி, உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்...

https://labham.money/events/webinar-apr18-2026?utm_source=labham_whatsapp&utm_medium=whatsapp_group&utm_campaign=webinar_apr18_2026

ஆனால், முக்கியமான விஷயம் என்னவெனில், ஒருமுறை கடனில் இருந்து விடுபட்டுவிட்டால், மீண்டும் தேடிச் சென்று கடனில் மாட்டக்கூடாது. 'அய்யய்யோ, எந்தக் கடனும் இல்லாமல் இருக்கே!' என்று நினைத்து புதுக் கடன் வாங்கக் கூடாது. கடனில் எதாவது ஒரு பொருளை வாங்குவதைவிட, அந்தப் பொருளுக்கான பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அந்தப் பொருளை வாங்கினால், வட்டியாகக் கட்டும் பணம் எல்லாமலே மிச்சமாகும்! 8% வட்டியில் ரூ.8 லட்சம் கடன் வாங்கி ஒரு கார் வாங்கினால், 5 ஆண்டுகளுக்குள் அதைக் கட்டி முடிக்கும்போது 1.50 லட்சம் ரூபாய் வட்டியாகக் கட்டி இருப்போம். ஆனால், இதே பணத்தை ஒரு மியூச்சுவல் ஃபண்டில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தால், சிறிய அளவில் லாபமும் கிடைக்கும். வட்டி கட்ட வேண்டிய அவசியமும் இருக்காது!

கடன் வாங்கிய அனைவரும் கடனை முதலில் அடைத்து, எதிர்காலத் தேவைகளுக்கான பணத்தை சேர்ப்பது மிகவும் நல்லது!

'லாபம்' டீமுடன் நேரடியாகப் பேசி முதலீட்டு ஆலோசனை பெறுங்கள்!

'லாபம்' மூலம் நீங்கள் ரெகுலர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டீர்களா, இதற்கு சரியான வழிகாட்டுதல் உங்களுக்குத் தேவையா? ஆம் எனில், பின்வரும் லிங்கினை கிளிக் செய்து எங்களுடன் பேசி சரியான முதலீட்டு ஆலோசனை பெற உங்களுக்கான நேரத்தை நீங்கள் தேர்வு செய்துகொள்ளுங்கள்... இதற்கான லிங்க்....
NRI https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

Whatsapp Groups

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான 'லாபம்' வாட்ஸ் அப் குரூப்பில் இணைய விருப்பமா? பின்வரும் லிங்க்கினை கிளிக் செய்யுங்கள்... https://chat.whatsapp.com/DbJob5Df5Ze1eT3cwsYN9N

Labham Whatsapp Channel

'லாபம்' வாட்ஸ் அப் சேனலில் இணைய விருப்பமா? பின்வரும் லிங்க்கினை கிளிக் செய்யுங்கள்...
https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o

Labham Youtube Video: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

உங்க குழந்தைகளோட School, College Fees சமாளிக்க இது ஒரு 'சூப்பர்' வழி! | பணம் வளர்ப்போம்

குழந்தை பிறந்தாச்சு... இதன் பிறகு, பெற்றோர்களுக்கு இருக்கும் அடுத்த மிகப்பெரிய செலவு, 'கல்விக் கட்டணம்'. எந்தத் திட்டமிடலில் கவனமாக இருக்கிறோமோ... இல்லையோ... கல்வி நிதி திட்டமிடல் மிகத் தெளிவாக இருக்க... மேலும் பார்க்க

'G.P.F. மற்றும் 'போஸ்ட் ஆஃபீஸ்' வேலைக்கு ஆவாதா? 'இரண்டாவது PF' பெற என்ன செய்யணும்?

காலை 9:45 மணிக்கு அவசரமாக வண்டியைப் பார்க் செய்துவிட்டு, பயோமெட்ரிக்கில் விரல் வைத்துவிட்டு, கொண்டுவந்த டிபன் கேரியரை டேபிளுக்குக் கீழே வைத்துவிட்டு சீட்டில் அமர்ந்தால்... அடுத்த விநாடி ஆரம்பமாகிறது உ... மேலும் பார்க்க

'பெற்றொர்' அத்தியாயத்தை கடனாளியாக இல்லாமல் மகிழ்ச்சியாகத் தொடங்க 'பிளான்'! | பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இந... மேலும் பார்க்க

Labham - 3: EMI + SIP... வீட்டுக் கடனை எளிதாகக் கட்டி முடிக்கும் சூப்பர் ஃபார்முலா

35 வயதானாலே போதும், 'சொந்தமா இன்னும் வீடு வாங்கலையா...? கடனைக் கிடனை வாங்கி, மொதல்ல, ஒரு வீடு வாங்குப்பா...' என்று நெருக்குதலைத் தர இன்று பல வீடுகளில் 'பெரியவர்கள்' தயாராக இருக்கிறார்கள். இன்றுள்ள நில... மேலும் பார்க்க

NRI - 10: ரிஸ்க்கே எடுக்க மாட்டேன் என்பவரா நீங்கள்? எத்தனை லட்சங்களை நீங்கள் இழப்பீர்கள் தெரியுமா?

மனிதர்கள் இரண்டு வகை. 'எந்த விஷயத்திலும் நான் ரிஸ்க்கே எடுக்க மாட்டேன்' என்பவர்கள் ஒரு வகை. 8 மணிக்கு ரயில் என்றால், 7.30 மணிக்கே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விடுவார்கள். 40 கிலோ மீட்டருக்கு மேல் வண்டிய... மேலும் பார்க்க

`25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்' புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அனுமதி இலவசம்; பரிசு உண்டு

சம்மர் வந்துவிட்டது. கொளுத்தும் வெயிலில் எல்லோரும் ஏசி, குளிர் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவோம். இதனால் மின்கட்டணமும் எகிறும். ஆனால், இந்த வெயில் காலத்திலும் இலவச மின்சாரம் மூலம் மின் கட்டணத்திலிருந்த... மேலும் பார்க்க