செய்திகள் :

'பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை' - 57 வயது ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரும் கைது

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 100- க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே பள்ளியில் உள்ள ஆசிரியர் பாஸ்கர் (57) என்பவர் அங்கு பயின்று வரும் சிறுமிகள் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சிறுமிகள் இதுபற்றி அவர்களது பெற்றோரிடம் கூறியதை அடுத்து பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்கள் பள்ளியில் திரண்டு சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியில் சிறுமிகளிடம் மோசமாக நடந்து கொண்ட ஆசிரியரை உடனே கைது செய்து, இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

velankanni

பின்னர், இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை டி.எஸ்.பி காவியா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரி, குழந்தைகள் நல அதிகாரி உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பள்ளியில் பயிலும் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். மேலும், ஏற்கனவே பெற்றோர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி (55) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசியரும், அவர்மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரும் கைதான சம்பவம், மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுநகர்: மாயமான மூதாட்டி; அழைத்துச் சென்ற தாய், மகள் - நகைக்காக கொல்லப்பட்ட கொடூரம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்,மனைவி அம்பிகா (வயது 62). இவர் கடந்த மார்ச் 8-ம் தேதி, காரியாபட்டி அருகேயுள்ள சித்து மூன்றடைப்பு கிராமத்திற்கு... மேலும் பார்க்க

`உனது வார்த்தைகள் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள போதுமானது' - பெண் பல் மருத்துவரின் விபரீத முடிவு

மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்த ஸ்துதி சோனாவானே, பல் மருத்துவம் படித்துள்ளார். அவர் இப்போது முதுகலைப் படிப்பு படித்து வந்தார். சோனாவானே பைசுல் முகமது கான் என்பவரை காதலித்து வந்தார். அவர்களுக்குள் ச... மேலும் பார்க்க

ஜம்முவில் பயங்கரம்: முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கொல்ல முயற்சி! - பதறவைக்கும் காட்சி!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தற்போதைய முதல்வர் உமர் அப்துல்லாவின் தந்தையுமான ஃபரூக் அப்துல்லா (88), மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.ஜம்முவின் கிரேட்டர் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணவி; காட்டுப் பகுதியில் சடலமாக மீட்பு- கிராம மக்கள் மறியல்

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ். விவசாயியான இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களது 17 வயது மகள் குறுக்குச்சாலை, அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் ... மேலும் பார்க்க

விருதுநகர்: பள்ளி வளாகம், கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்; ஆசிரியைக்கு வலுக்கும் எதிர்ப்பு!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, ஜெகஜீவன் ராம் தெருவில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 164 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரை வைத்து ஆசி... மேலும் பார்க்க

மானாமதுரை: `காவல்துறையினர் கண்களைக் கட்டி, காலை அடித்து உடைத்தனர்!' - வெளியான ஆகாஷ் வாக்குமூலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை - கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன். பொறியியல் பட்டதாரியான இவர், பக்கத்து ஊரில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர்களைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறி, மா... மேலும் பார்க்க