செய்திகள் :

"பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்" - தமாகா தலைவர் ஜி.கே. வாசன் சொல்லும் காரணம் என்ன?

post image

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருக்கிறார்.

சென்னை எழும்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜி.கே வாசன்
ஜி.கே வாசன்

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜி.கே. வாசன், "மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மாநிலத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விலகுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகியும் எங்களுடைய நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை.

எங்களுடைய கூட்டணியும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. தேர்தல் நேரங்களில் கூட்டணி அவசியம். ஆனால், கூட்டணி அரசியலில் இயக்கத்தின் வளர்ச்சி குறைவதாக நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

தனித்தன்மையோடு கட்சி செயல்பட வேண்டும் என விரும்புகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் வரும் வரை எங்கள் கட்சி தனித்தன்மையோடு செயல்பட்டு மீண்டும் அடித்தளத்தைப் பலப்படுத்த வேண்டும்.

ஜி.கே. வாசன்
ஜி.கே வாசன்

இனி தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி. பாஜக மற்றும் அதிமுகவுடன் எந்தச் சண்டையும் தற்போது கிடையாது. கூட்டணிக் கட்சிகளுடன் எந்த மனக்குமுறலும் இல்லை, கூட்டணியில் இருந்து நட்பு சக்தியாகவே விலகுகிறோம்'' என்று தெரிவித்திருக்கிறார்.

தஞ்சாவூர்: 'மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம்? மகளிர் அணிக்கு வாட்ச் பரிசு' - புது ரூட்டில் திமுக தலைமை

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தலைமை கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் என்... மேலும் பார்க்க

"அண்ணாமலை வருகை நல்லது; தவெகவினர் அம்புகுறிகள்; விரைவில் நான்..." - ராகவா லாரன்ஸ் பேசியது என்ன?

"நான் அரசியலுக்கு வரணுமா ? வேண்டாமா ? என்பதை மக்களே முடிவு செய்யட்டும். மக்கள் வருமாறு சொன்னால் நான் அரசியலுக்கு வருகிறேன். விரைவில் உங்கள் முடிவை சொல்லுங்கள். நான் ஆவலாகக் காத்துகொண்டு இருக்கின்றேன்"... மேலும் பார்க்க

முதல்வர் பாணியில் ஆபீஸில் மதிய சாப்பாடு; பவானிசாகர் எம்எல்ஏ ரீல்ஸ்! எதிர்க்கட்சியினர் சொல்வதென்ன?

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் த.வெ.க வேட்பாளராகப் போட்டியிட்டவர் தமிழ்ச்செல்வி. தனக்கு எதிராக களத்தில் நின்ற தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர், அ.தி.மு.க வேட்பாளர் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கடன்கள், ஏறும் டீசல் விலை... 60 நாட்களுக்குப் பிறகு பாயக் காத்திருக்கும் படகுகள்

"ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் முடிஞ்சாச்சு. இனி எப்படியாவது கடலுக்குப் போய் நம்ம வண்டியை ஓட்டணும். ஆனா, முன்ன மாதிரி இப்ப நிம்மதியா தொழில் பண்ண முடியலை" என்று பெருமூச்சுடன் கூறுகிறார் புதுக்கோட்டை மாவட... மேலும் பார்க்க

"தன் மகனை அரசியலுக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி டிராமா செய்கிறார்" - சி.வி.சண்முகம் தாக்கு

அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் இன்று (ஜூன்.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ''அதிமுகவின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நடந்து முடிந்த... மேலும் பார்க்க

சபரிமலை தங்கக் கொள்ளை: குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்தின் வக்கீல் அரசு வழக்கறிஞரா? எதிர்ப்பால் ராஜிநாமா

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிலையில் 2019-ம் ஆண்டு தங்க முலாம் பூசியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தடினமாக இருந்த தங்கப் பூச்ச... மேலும் பார்க்க