செய்திகள் :

பாமகவில் இருந்து ஜி.கே மணி நீக்கம்; அன்புமணி தரப்பு அதிரடி

post image

பாமகவில் இருந்து ஜி.கே.மணியை நீக்கம் செய்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ராமதாஸ் அதரவாளரும், பாமக எம்எல்ஏ- வுமான ஜி.கே.மணியை பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கியிருக்கிறார்.

அன்புமணி, ராமதாஸ்

இதுதொடர்பாக அன்புமணி தரப்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், கட்சியின் அமைப்பு விதி 30-இன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த 18.12.2025&ஆம் நாள் அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணி அவர்களிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது. கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி அவர்கள் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30-இன்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது.

 அன்புமணி
அன்புமணி

அதை ஏற்று ஜி.கே.மணி அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (26.12.2025) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணி அவர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

மும்பை: "பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து" - புறாக்களுக்கு உணவளித்தவருக்கு நீதிமன்றம் அபராதம்

மும்பையில் பொது இடத்தில் புறாக்களுக்குச் சாப்பாடு கொடுக்க மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தடை விதித்து இருக்கிறது. பொது இடத்தில் புறாக்களுக்குச் சாப்பாடு போடுவதால் பொதுமக்களின் உடல் நலத்திற்கு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி : உறவுகளால் இணைந்த தாக்கரே, பவார்களால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் வரும் ஜனவரி 15ம் தேதி மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண... மேலும் பார்க்க

Modi: ``அந்த அடிமைத்தனத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்தது பாஜகதான்" - பிரதமர் மோடி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீன் தயாள் உபாத்யாய் மற்றும் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் வாழ்க்கை மற்றும் லட்சியங்களைப் போற்றும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 'ராஷ்டிர பிரேர்ணா ... மேலும் பார்க்க

Nigeria: "கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொல்கிறார்கள்; அதனால் ISIS தீவிரவாதிகளைத் தாக்கினோம்" - ட்ரம்ப்

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் கொடிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.கடந்த அக்டோபர் மாத இறுதியிலிருந... மேலும் பார்க்க

காற்று மாசு: ``டெல்லியில் இரண்டு நாள் தங்கினாலே தொற்று வந்துவிடுகிறது" - அமைச்சர் நிதின் கட்கரி

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.கடந்த சில மாதங்களாக காற்றின் தரக் ... மேலும் பார்க்க