செய்திகள் :

`பாமரனில் இருந்து ஒருவன் வர வேண்டும் என விஜய் நினைத்தார்' - கோவையில் கணக்கை துவக்கி வைத்த விக்னேஷ்!

post image

கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க-வில் சபரி கார்த்திகேயன், அ.தி.மு.க-வில் செ.தமோதரன், த.வெ.க-வில் விக்னேஷ், நா.த.க-வில் பானுப்பிரியா போட்டியிடுகின்றனர்.

இன்று காலை முதல் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அனைத்து சுற்றுகளிலும் த.வெ.க. வேட்பாளர் விக்னேஷ் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். வாக்கு எண்ணிக்கை இறுதியில் விக்னேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் இந்த தொகுதியில் 2001 ம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த அ.தி.மு.க-வின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்துள்ளது. மேலும், தி.மு.க. வேட்பாளர் சபரி கார்த்திகேயன் இரண்டாவது இடம் பெற்ற நிலையில், இந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ், த.வெ.க-வில் கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகம் விஜய்
விஜய்

இது குறித்து விக்னேஷ் கூறியதாவது, “எனக்கு விழுந்த ஓட்டுகள் எல்லாம் தளபதி விஜய்க்கு விழுந்த ஓட்டுகள் தான். மக்கள் அவரை நம்புகிறார்கள். வாக்கு எண்ணிக்கை நிறைவில் பெரும்பான்மைக்கு தேவையான 117-ஐ தாண்டி,  த.வெ.க 130 இடங்களில் வெற்றி பெறும். த.வெ.க. தனித்து ஆட்சி அமைக்கும். எனக்கு அரசியல், பணப் பின்புலம் இல்லை. என்னை விட எத்தனையோ கோடி பணம் உள்ளவர்கள் கூட சீட் கேட்டார்கள். இருந்தாலும் என்னை நம்பி விஜய் வாய்ப்பு தந்தார். பாமரனில் இருந்து ஒருவன் வர வேண்டும் என நினைத்தார். கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என நினைப்பது தான் அவரது சிந்தனை. ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நான் இருப்பேன்” என்றார்.

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது. அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற... மேலும் பார்க்க

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில்,2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க