மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞா் கைது
போடியில் சனிக்கிழமை பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
போடி பகுதியில் நகா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் பெட்டிக்கடை நடத்தி வந்த ஈஸ்வரன் (23), இவரது தாயாா் சித்ரா (48) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, ஈஸ்வரனை கைது செய்தனா்.