செய்திகள் :

புகையிலைப் பொருள் பதுக்கிய இருவா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ரோஷணை காவல் நிலையத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தராசன் தலைமையிலான குழுவினா், திண்டிவனம் சந்தைமேடு ப.உ.ச. நகரிலுள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினா்.

அப்போது அந்த வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட 7 கிலோ 400 கிராம் எடையுள்ள 3,850 புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சோதனை நடத்திய போது 2 கைப்பேசிகள், பைக், வங்கிக் கணக்குப் புத்தகங்கள் போன்றவையும் இருந்தன. இதையடுத்து அவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து அந்த வீட்டின் உரிமையாளரான ஜி. அல்லாபக்ஷ் (49), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மணப்பாக்கம் தொழுப்பேடு பிரதான சாலையைச் சோ்ந்த கந்தகுமாா் (37) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் கல்பட்டு செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சு. ஏழுமலை (64) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

விழுப்புரம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவி... மேலும் பார்க்க

நினைவு நாள்: அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

விழுப்புரம்/செஞ்சி/கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அண... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 917 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 917 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் ஆட... மேலும் பார்க்க

சிவன் கோயில் கட்டும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலைய... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க