செய்திகள் :

பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக உயர்ந்த விலை! - விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதி!

post image

ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 நாட்களில் மட்டும் எரிபொருள் விலைகள் உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். தற்போதைய புதிய மாற்றத்தின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் உயர்வால், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலைகள் ஒட்டுமொத்தமாக லிட்டருக்கு சுமார் 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் பங்குகள்
பெட்ரோல் பங்குகள்

முன்னதாக, கடந்த மே 15-ம் தேதி முதன்முதலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மே 19-ம் தேதி மீண்டும் லிட்டருக்கு 90 காசுகள் வீதம் விலை அதிகரிக்கப்பட்டது. தற்போது மே மாதத்தில் ஏற்பட்டுள்ள இந்த மூன்றாவது விலை உயர்வு பொதுமக்களின் மாதாந்திர வரவு-செலவு கணக்குகளைப் பெரிதும் பாதித்துள்ளது.

இந்தச் சமீபத்திய விலை மாற்றத்தைத் தொடர்ந்து, நாட்டின் தலைநகரான டெல்லியில் பெட்ரோல் விலை தற்போது லிட்டருக்கு ரூ.99.51 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.92.49 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசுகள் குறைந்த நிலையில், நேற்று மேலும் 6 காசுகள் குறைந்தது. அதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.104.51-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.96.13-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.105.31-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.96.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக உயர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் உயர்வு, அனைத்துத் துறைகளிலும் போக்குவரத்து மற்றும் விநியோகச் செலவுகளை நேரடியாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வால் நுகர்வோர் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த எரிபொருள் விலை உயர்வு பணவீக்க அழுத்தத்தையும், நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திரச் செலவுகளையும் மேலும் அதிகரிக்கும் என்ற கவலை பரவலாக எழுந்துள்ளது.

`மேட்டூர் அணை வரலாற்றில் ஏற்பட்டுள்ள 62-வது ஆண்டு காலதாமதம் இது!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

காவிரி ஆற்றுப்படுகை பாசனத்தின் அடிப்படை ஆதாரமாகப் பங்காற்றி வருகிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரால் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி எ... மேலும் பார்க்க

சிங்கப்பெண் திட்ட வீடியோ சர்ச்சை: அமைச்சர் ராஜ் மோகன் சொல்லும் விளக்கம் என்ன?| Live Updates

லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்ற அமைச்சர் வன்னி அரசு!வன்னி அரசுசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் வன்னி அரசு. சிம்பொனி இசையமைத்து சாதனை நிகழ்த்திய இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்றார். அப்போது,``தமிழ... மேலும் பார்க்க

``கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும்..." - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபனைச் சந்தித்து கோரிக்கை ம... மேலும் பார்க்க

ஈரோடு: பெண்கள், மாணவிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! - Album

ஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில... மேலும் பார்க்க

மீண்டும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை; லாரி வாடகை உயர்வும் சங்கிலித் தொடரான சிக்கல்களும்!

World Inequality Lab அறிக்கையின் படி இந்தியாவில் 10 சதவிகிதப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே... இருக்கும் நிலையில், நடுத்தர வர்கத்தினரும், ஏழைகளும் தங்களின் அன்றாட வாழ்... மேலும் பார்க்க

C-295: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராணுவ விமானம்; `Make in India’ வரலாற்றுச் சாதனை!

இந்திய ராணுவத்தின் போக்குவரத்து தேவைகளுக்காக பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய 'ஆவ்ரோ-748' (Avro-748) ரக விமானங்களுக்குப் ஓய்வளித்துவிட்டு, அதிநவீன வசதிகள் கொண்ட 56 புதிய C-295 போக்குவரத்த... மேலும் பார்க்க