செய்திகள் :

பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட தவெக நிர்வாகி; கண்டித்த அண்ணாமலை - தவெக ரியாக்ஷன் என்ன?

post image

தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,"பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

ஆனந்த்- வேம்புலி
ஆனந்த்- வேம்புலி

திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?

சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வேம்புலி நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடலூர்: கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டம்; அரசுக்கு அன்புமணியின் கோரிக்கை என்ன?

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம் (Hindustan Oil Exploration Company - HOEC) முடிவு செய்திருப்பத... மேலும் பார்க்க

மாற்றி மாற்றிப் பேசும் ட்ரம்ப்; பிடிகொடுக்காத இஸ்ரேல்... முடிவுறாமல் தொடரும் ஈரான் போர்!

'இதுவரையில் இல்லாத அளவிலான தாக்குதல்', 'கடுமையான தாக்குதல்' - இப்படி இரண்டு - மூன்று நாள்களுக்கு ஒருமுறை கூறி வருகிறார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதன்படி, நேற்று மாலை (இந்திய நேரப்படி), ட்ரம்ப் ஈரான் ... மேலும் பார்க்க

`ஊழல் செய்பவர்கள் 6 மாதத்திற்குள் வழிக்கு கொண்டுவரப்படுவார்கள்' - நிர்வாகிகளிடம் ஜான் ஆரோக்கியசாமி

தவெகவின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்மட்ட அரசு துற... மேலும் பார்க்க

பிரிந்தவர்கள் இணைவார்களா? மம்தா, சரத் பவார் கட்சிகளை இணைக்கும் பேச்சு - அகண்ட காங்கிரஸ் சாத்தியமா?

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சிகள் மீண்டும் தாய் கட்சியான காங்கிரஸில் இணையுமா? திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி முற்றிவரும் நிலையில்... மேலும் பார்க்க

நிதி ஆயோக் கூட்டம்: "திமுக-வின் சாதனைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல்" - உதயநிதி சாடல்

நிதி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகள் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல் அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்... மேலும் பார்க்க

Vijay: "கர்நாடகம் சென்ற விஜய் காவிரி நீரைக் கொண்டு வருவாரா?" - தவெக அரசுக்கு திமுக கேள்வி

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுப்படிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கு அரசியல் தலைவ... மேலும் பார்க்க