செய்திகள் :

பெனிட்டோ முசோலினி முதல் ஷேக் ஹசீனா வரை - மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 உலகத் தலைவர்கள்!

post image

நவீன உலகின் அரசியல் வரலாற்றில் தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் நிகழ்வு பலமுறை நடந்திருக்கிறது. பொதுவாக ஒரு அரசைக் கவிழ்த்தப் பிறகு, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பெரிய அரசியல் எழுச்சிகளின்போது முந்தைய தலைவர்கள் விசாரிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, சில தண்டனைகள் நிறைவேற்றவும் பட்டிருக்கின்றன. சில நேரங்களில் தீர்ப்புகள் மாற்றப்பட்டிருக்கின்றன.

இந்த கதைகள் அரசியல் அதிகாரம் எப்படி ஒருநொடியில் தலைகீழாக மாறக்கூடும் என்பதையும் அதிகாரப்போட்டி ஒட்டுமொத்த தேசத்தையும் எப்படி மாற்றக்கூடும் என்பதையும் நமக்குக் காட்டுகின்றன.

ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனா

வங்காளதேச பிரதமர்: 1996–2001 மற்றும் 2009–2024

தற்போது வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கதையும் அப்படியான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் அவருக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், (Bangladesh International Crimes Tribunal) மரண தண்டனை வழங்கியது.

அவரது ஆட்சிக்காலத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் இந்த தண்டனையை கண்டித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை ஒரு கேலிக்கூத்து என விமர்சித்துள்ளார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு சவால் விடுத்திருக்கிறார்!

செல் பேயர் (Cell Bayar)

துருக்கி பிரதமர்: 1937-39 | ஜனாதிபதி: 1950-60

துருக்கியில் 1960ம் ஆண்டு நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு, அதன் ஜனாதிபதியாக இருந்த செல் பேயர் அரசியலமைப்பு சட்டங்களை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர், அவரது தண்டனை குறைக்கப்பட்டது, வயது மற்றும் உடல்நலம் காரணமாக 1964 இல் அவர் விடுவிக்கப்பட்டார். துருக்கியில் அதிகம் பேசப்படும் அரசியல் தலைவர்களுள் ஒருவர் இவர்.

சுல்பிகர் அலி பூட்டோ, செல் பேயர்

சுல்பிகர் அலி பூட்டோ

பாகிஸ்தான் ஜனாதிபதி 1971–1973 | பிரதமர் (1973–1977)

பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஜெனரல் ஜியா-உல்-ஹக் என்பவர் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பில் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அரசியல் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் இவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த விசாரணை பல சர்ச்சைகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 4, 1979 அன்று பூட்டோ தூக்கிலிடப்பட்டார். பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கிய புள்ளியாக அந்த சம்பவம் அமைந்துள்ளது.

அட்னான் மெண்டரஸ்

துருக்கி பிரதமர் 1922–1943

1960ம் ஆண்டு மெண்டரஸ் அரசியலமைப்பை மீறியதாகவும், அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் அவரது ஆட்சி ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. துருக்கியில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1961ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி இவரது மரண தண்டனை நிறைவேறியது. துருக்கியின் அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியாக அந்த நாள் நினைவுகூறப்படுகிறது.

பெனிட்டோ முசோலினி

பெனிட்டோ முசோலினி

இத்தாலி பிரதமர் 1922 - 43

இரண்டாம் உலகப்போரின் முடிவில் இத்தாலி முசோலினிக்கு எதிராக திரும்பியது. 1943 ஜூலை 25 அன்று முசோலினி பாசிச கிராண்ட் கவுன்சிலால் பதவி நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஹிட்லரால் மீட்கப்பட்டு வடக்கு இத்தாலியில் சலோ ரிபப்ளிக் என்ற பிராந்தியத்துக்கு பொம்மை தலைவராக நியமிக்கப்பட்டார். (அதிகாரம் ஜெர்மன் ராணுவத்திடம் இருந்தது).

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வீழத்தொடங்கியபோது இத்தாலிய கம்யூனிஸ்ட்களால் பிடிக்கப்பட்டு ஏப்ரல் 28, 1945 அன்று அவரது காதலி கிளாரா பெட்டாச்சி உடன் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் மிலான் நகரில் தலைகீழாக தொங்கவிடப்பட்டது.

இம்ரே நாகி

ஹங்கேரி பிரதமர் 1953–1955, 1956

இம்ரே நாகி ஹங்கேரியின் வரலாற்றில் மிக முக்கியமான ஆட்சியாளர். 1956ம் ஆண்டு சோவியத் ஆட்சிக்கு எதிராக ஹங்கேரியை வழிநடத்தினார். இவரது கிளர்ச்சி தோல்வியடைந்ததால் கைது செய்யப்பட்டு, ரகசியமாக விசாரிக்கப்பட்டு, 1958 ஜூன் 16 அன்று தூக்கிலிடப்பட்டார். இவரை ஹங்கேரி தேசத்தின் வீரராக இன்றும் மரியாதை செலுத்துகின்றனர்.

சதாம் ஹுசேன்

சதாம் ஹுசைன்

ஈராக் ஜனாதிபதி 1979–2003

அமெரிக்க படைகளிடம் பிடிபட்ட சதாம் ஹுசைன், ஈராக்கிய தீர்ப்பாயத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் மனித குலத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டு 2006, டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அந்த தண்டனை ஈராக் வரலாற்றில் முக்கிய சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.

ஹிடேகி டோஜோ

ஜப்பான் பிரதமர் 1941-1944

டோஜோ இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானை வழிநடத்திய தலைவராவார். தோல்விக்குப் பிறகு அவர் மீது Far East சர்வதேச இராணுவ தீர்ப்பாயத்தால் போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டன. குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு டிசம்பர் 23, 1948 அன்று டோக்கியோவில் தூக்கிலிடப்பட்டார்.

பர்வேஸ் முஷாரஃப்

பாகிஸ்தான் ஜனாதிபதி 2001–2008

2019 ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் முஷாரஃப் ஆஜராகாமல் இருந்தபோது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், பின்னர் அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. முஷாரஃப் 2023ல் உயிரிழந்தார்.

SIR: `விரக்தி, வேலைப் பளு, அவமரியாதை' - கண்டுகொள்ளப்படாத BLOகளின் மன உளைச்சல்; கவனிக்கப்படுமா?

தமிழ்நாட்டின் தற்போது மிக முக்கியமான பேசுபொருளாகியிருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டுவந்திருக்கும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR).பீகார் சட்டமன்றத் தேர்தல... மேலும் பார்க்க

விருதுநகர்: "பிறந்த மண்ணுக்கு எதுவும் செய்யவில்லை" - 20 சென்ட் நிலத்தை சாலை அமைக்க தானமளித்த நீதிபதி

விருதுநகரில் புத்தக திருவிழா கடந்த 14ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பேசியதாவது, “நீதிபதியாக ஏழு ஆண்டுகள் இருந்துள்ளேன்.... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியில் உறுதியாக நிற்கும் பிரேமலதா; தயங்கும் பிரதான கட்சிகள்; குழப்பத்தில் நிர்வாகிகள்!

"மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும், இந்த முறை மிக பொறுமையாக, தெளிவாகச் சரியான நேரத்தில் முடிவெடுப்போம், கூட்டணி அமைச்சரவையில் நாங்கள் இருப்போம்" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா... மேலும் பார்க்க

Sheikh Hasina: வன்முறை டு மரண தண்டனை - வங்கதேச தந்தையின் மகளுக்கு நடந்தது என்ன?

வங்கதேச தந்தையின் மகள்ஷேக் ஹசீனா 2009 ஆம் ஆண்டிலிருந்து வங்கதேசத்தை ஆண்டு வந்தவர். 78 வயதாகும் இவர், வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகன். பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தைப்... மேலும் பார்க்க

`பீகார் கொடுத்த அடி; உதயநிதியும், விஜய்யும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கட்டும்’ - தமிழிசை

வேலூரில் இன்று, பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேர்தல் ஆணையம் `ஒருமுறை வாக்காளர் பட்டியலைத் திருத்த வேண்... மேலும் பார்க்க

`டிவி மேல ரிமோட் தூக்கி போட்டுட்டு எதுக்காக திமுக-விடமே சேர்ந்தீங்க?" - விளக்கும் எம்.பி கமல்ஹாசன்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் 2018 பிப்ரவரியில், தி.மு.க, அ.தி.மு.க என இரு கட்சிகளையும் எதிர்த்து `மக்கள் நீதி மய்யம்' எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன்.தங்களின் முதல் தேர்தலாக 20... மேலும் பார்க்க