செய்திகள் :

பைக்கர்: 18 வயது இளைஞனாக மாறிய 41 வயது நடிகர்; '2 ஆண்டுக்கால கடின உழைப்பு' - நடிகர் சர்வானந்த்

post image

இயக்குநர் அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில், மோட்டோகிராஸ் பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'பைக்கர்'. இப்படத்திற்காக நடிகர் சர்வானந்த் மேற்கொண்ட அதிரடி உடல்மாற்றமும், அதன் பின்னணியில் உள்ள உழைப்பும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்ததிலிருந்து நடிகர் சர்வானந்த் உடல்மாற்றம் பேசப்பட்டு வருகிறது. 41 வயது நடிகர் எப்படி 18 வயது இளைஞர் போன்ற தோற்றத்துக்கு மாறினார் என்பது குறித்த கேள்விகள் அவரைப் பின் தொடர்ந்தன.

சர்வானந்த்
சர்வானந்த்

இந்த நிலையில், சமீபத்தில் அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், தன் உடல் மாற்றம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். அவர் பேட்டியில், ``பைக்கர் படத்தில் 18 வயது பைக் ரேஸராகத் தோன்றுவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக என் வாழ்க்கையையே மாற்றியமைத்தேன்.

தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து, ஓட்டம், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி எனப் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டேன். இந்தப் பயணம் எனக்கு எளிதாக இருக்கவில்லை. மன அழுத்தம் மற்றும் சுய சந்தேகம் எழுந்தபோது, 'யோகா' மூலம் மனதை அமைதிப்படுத்தி இலக்கை நோக்கிப் பயணித்தேன்.

சர்வானந்த்
சர்வானந்த்

இதன் விளைவாக, உடல் மெலிந்து, கட்டுக்கோப்பான ஒரு வீரரைப் போல மாறினேன். படப்பிடிப்பின் முதல் நாள் கண்ணாடியில் என்னைப் பார்த்தபோது, ஒரு ஒழுக்கமான, புதிய மனிதனை என்னால் பார்க்க முடிந்தது. நாம் எவ்வளவு சோர்ந்து போயிருந்தாலும், ஒரு சரியான முடிவு நம் வாழ்க்கையை அப்படியே மாற்றும் என்பதை இந்தப் பயணம் எனக்குக் கற்றுக்கொடுத்தது. ஏப்ரல் 3-ம் தேதி திரையில் 'விக்கி'யைப் பார்க்கும்போது, அது வெறும் நடிப்பு மட்டுமல்ல, எனது இரண்டு ஆண்டுக்கால ரத்தம் மற்றும் வியர்வையின் பலன் என்பதை ரசிகர்கள் உணர்வார்கள்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

"முழுமையாக குணமடைய இன்னும்..." - பவன் கல்யாண் சிகிச்சை பற்றி சிரஞ்சீவி

ஆந்திராவின் துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் உடல் நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை (17.04.2026) அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை (18.04.2026) அவருக்கு அறுவை சி... மேலும் பார்க்க

"அதை முடித்துவிட்டு இரவில் பாடங்களைப் படிக்க வேண்டியிருக்கும்" - எம்பிபிஎஸ் பட்டம் பற்றி ஸ்ரீ லீலா

கோலிவுட், டோலிவுட் என இப்போது டிரெண்டிங்காக வலம் வருகிறார் நடிகை ஸ்ரீ லீலா. இவர் சமீபத்தில் அவருடைய எம்பிபிஎஸ் (MBBS) படிப்பை முடித்து மருத்துவர் பட்டம் பெற்றிருந்தார். ஶ்ரீலீலாதிரையில் நடனமாடுவதையும்... மேலும் பார்க்க

Ram Charan: ``நான் கண்டிப்பான தந்தைதான்!" - குழந்தைகள் பற்றி ராம் சரண்

டோலிவுட்டின் முன்னணி நடிகரான ராம் சரண், தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் 'பெத்தி' (Peddi) திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு க்ளின் காரா என்ற மகள் ப... மேலும் பார்க்க

Mani Sharma: "ஹார்மோனியத்தை தூடி தட்டி எடுத்தபோது.!" - கம்பேக் பற்றி பிரபல இசையமைப்பாளர் மணி சர்மா

தமிழ், தெலுங்கு என பல ஹிட் பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் மணி ஷர்மா. இன்றும், இவருடைய பாடல்கள்தான் பலருடைய ப்ளேலிஸ்டில் முக்கிய வைப் நம்பர்கள். Mani Sharmaடோலிவுட்டில் வெளிவந்த 'பேபி' திரைப்படத்தின் இய... மேலும் பார்க்க

Peddi: "அப்போது சைவ உணவு மட்டுமே" - ராம் சரணின் மல்யுத்த வீரருக்கான உடலமைப்பிற்கு பின்னிருக்கும் கதை

ராம் சரண் நடித்திருக்கும் 'பெத்தி' திரைப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இந்த ரிலீஸ் தேதியிலிருந்து படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் எனப் பேசப்படுகிறது. அது... மேலும் பார்க்க