பைக் மீது காா் மோதியதில் தந்தை பலி: மகள் காயம்
தஞ்சாவூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்த தந்தை உயிரிழந்தாா், மகள் காயமடைந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கல்யாணபுரம் இளம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பி. அருளரசு (52), ஒப்பந்ததாரா். இவா் தனது மகள் அட்சயாவை (15) அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூரிலிருந்து கல்யாணபுரத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அரசூா் ரவுண்டானா பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த காா் மோதி அருளரசு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அட்சயா தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.