செய்திகள் :

போனுக்கு வந்த திருமண அழைப்பிதழ்; 5 லட்சத்தை இழந்த நபர்- புது வகை மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி?

post image

பெங்களூருவைச் சேர்ந்த நூர் நஹித் கான் என்ற 42 வயது தொழிலதிபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், "எங்கள் திருமணத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். முழுமையான விவரங்களுக்குக் கீழே இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழை டவுன்லோட் செய்து பார்க்கவும்" என்று அன்பாகக் குறிப்பிடப்பட்டு, கூடவே ஒரு ஃபைல் அனுப்பப்பட்டிருந்தது.

அதை உண்மையான அழைப்பிதழ் என நம்பிய அவர், அந்த ஃபைலை டவுன்லோட் செய்துள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் (அதிகாலை 4.45 முதல் 4.54 மணிக்குள்), அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பல UPI பரிவர்த்தனைகள் மூலமாக ரூபாய் 5,00,440 திருடப்பட்டது.

scam alert
scam alert

இந்த மோசடி எப்படி வேலை செய்கிறது?

பொதுவாக திருமண அழைப்பிதழ்கள் புகைப்படமாகவோ (JPEG, PNG) அல்லது ஆவணமாகவோ (PDF) மட்டுமே வரும். ஆனால், அந்தத் தொழிலதிபருக்கு வந்தது .apk (Android Package Kit) என்ற வடிவிலான ஒரு ஃபைல்.

ஆன்ட்ராய்டு மொபைல்களில் ஒரு புதிய செயலியை (App) அதிகாரபூர்வ ப்ளே ஸ்டோருக்கு வெளியே இருந்து இன்ஸ்டால் செய்யப் பயன்படும் ஃபைல்தான் APK. மோசடி நபர்கள் திருமண அழைப்பிதழ் என்ற பெயரில், ஒரு ஆபத்தான உளவுச் செயலியை APK ஃபைலாக அனுப்புகிறார்கள். அதை நாம் வெறும் புகைப்படம் அல்லது PDF என நினைத்து கிளிக் செய்வோம்.

அதை நாம் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்தவுடன், அந்தச் செயலி நம் மொபைலின் பின்னணியில் யாருக்கும் தெரியாமல் செயல்படத் தொடங்கும். நமது மொபைலின் மெசேஜ்கள் (SMS), கேமரா, கூகுள் பே (GPay), மற்றும் பேங்கிங் ஆப்ஸ் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் மோசடி நபர்களின் கைக்குச் சென்றுவிடும். வங்கியில் இருந்து வரும் OTP-யை அவர்களே நமது மொபைலில் இருந்து படித்து, பணத்தை எளிதாகத் திருடி விடுகிறார்கள்.

scam alert
scam alert

செய்யக் கூடாதவை

  • வாட்ஸ்அப் அல்லது டெலிகிராமில் யாராவது .apk என்று முடியும் ஃபைலை அனுப்பினால், அதை எக்காரணம் கொண்டும் டவுன்லோட் செய்யவோ, திறக்கவோ கூடாது.

  • தெரியாத எண்களில் இருந்து வரும் இணைப்புகள் (Links) அல்லது ஃபைல்களைக் கிளிக் செய்யவே கூடாது. திருமண அழைப்பிதழ், வேலைவாய்ப்பு, லாட்டரி என எந்தப் பெயரில் வந்தாலும் தவிர்க்கவும்.

  • எந்தவொரு செயலியையும் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மட்டுமே இன்ஸ்டால் செய்ய வேண்டும். வாட்ஸ்அப் அல்லது பிரவுசர் வழியாக வரும் ஆப்களை இன்ஸ்டால் செய்யக்கூடாது.

  • வாட்ஸ்அப்பில் ஒரு ஃபைல் வந்தால் அதன் கடைசி எழுத்துகளைக் கவனியுங்கள். அது .pdf அல்லது .jpg என்று முடிந்தால் மட்டுமே அது புகைப்படம் அல்லது ஆவணம். .apk என்று இருந்தால் அது நூறு சதவீதம் மோசடியே.

நாணயம் விகடனில் வெளிவந்துள்ள ''பணத்தைப் பறிக்க வீசப்படும் ‘பான் கார்டு’ வலை... உஷார் மக்களே!'' படிக்க க்ளிக் செய்க...

உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் செட்டிங்ஸில் Install Unknown Apps என்ற வசதி `Off' செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இந்த வகையான மோசடிகள் குறிப்பாக தொழில்நுட்பம் அதிகம் பரிச்சயமில்லாதவர்களையே குறிவைக்கின்றன. எனவே, உங்கள் வீட்டில் உள்ள பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் .apk ஃபைல்களின் ஆபத்து குறித்துப் புரியும்படி எடுத்துக் கூறுங்கள்.

scam alert

டிஜிட்டல் உலகில் நம்முடைய அறியாமையே திருடர்களின் மிகப்பெரிய மூலதனம். எந்த ஃபைலை டவுன்லோட் செய்யும் முன்பும் ஒரு நிமிடம் சிந்தித்துச் செயல்படுவதே நம் பணத்தைப் பாதுகாக்கும்!

மது போதையில் ஆம்னி பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள்; காட்டிக்கொடுத்த மூச்சு பரிசோதனை கருவி!

தூத்துக்குடி நகர போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீஸார் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முன்பு இரவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இரு... மேலும் பார்க்க

"அவர் பக்கத்திலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள்" - காதலன் இறந்ததால் பெண் எடுத்த விபரீத முடிவு

கேரளம் மாநிலம் காசர்கோடு மாவட்டம் கும்பளா அருகே உள்ள கிதூர் குண்டங்கேரடுக்கை பகுதியைச் சேர்ந்த ஜெயானந்தன் - தேவி தம்பதியினரின் மகள் பிரபுல்லா (26). பாலக்காட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக... மேலும் பார்க்க

சிவகாசி: மகளைக் காதலித்த 2 இளைஞர்களை அடுத்தடுத்து கொலை செய்த தந்தை; சிக்கியது எப்படி?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள செவளூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். லாரி டிரைவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் 17 வயது மகளைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தெரிந்... மேலும் பார்க்க

`ஒரே இடத்தில் 364 ரௌடிகள்; இனிமேல் எந்த குற்றத்திலும் ஈடுபடக்கூடாது' - திருச்சி எஸ்.பி வார்னிங்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 364 பேரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் வரவழைத்தனர். அவர்கள் அனைவரையு... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `சரியாக பூட்டப்படாத கைதி அறை; கண்ணயர்ந்த போலீஸார்' - கைதி தப்பியோடிது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் தமிழரசன். இவர் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த அடிதடி வழக்க... மேலும் பார்க்க

கம்போடியாவில் இருந்து மும்பை பெண்ணை டிஜிட்டலில் கைது என்று சொல்லி ரூ.60 லட்சம் பறிப்பு: 4 பேர் கைது

பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களில் ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். புதிதாக மும்பையை சேர்... மேலும் பார்க்க