செய்திகள் :

"மகளிருக்கு ரூ.6,500 கோடியை ஒதுக்கிய முதல்வரால், எங்களுக்கு செய்ய முடியாதா?" - பகுதிநேர ஆசிரியர்கள்

post image

தமிழகத்திலுள்ள பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட நாட்களாக போராடி வந்த நிலையில், தேர்தல் வரவுள்ள நிலையில் சமீபகாலமாக தங்கள் போராட்டத்தினை சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் தீவிரமாக நடத்தி வருகின்றன.

செந்தில்குமார்
செந்தில்குமார்

அதில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பும் தொடர்ந்து போராடி வருகிறது.

இதுகுறித்து இவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 சட்டமன்ற தேர்தலின்போது, தாங்கள் ஆட்சிக்கு வரும்போது பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக-வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

ஆட்சிக்கு வந்து 1,746 நாட்கள் ஆகி இன்னும் சில நாட்களில் அடுத்த தேர்தலுக்கும் அறிவிப்பு வரப்போகிறது. ஆனாலும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை.

இடைக்கால பட்ஜெட்டில் பணிநிரந்தர அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு பகுதிநேர ஆசிரியர்களுக்கு திமுக கொடுத்த 181-வது வாக்குறுதியை இம்முறையாவது நிறைவேற்ற வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசுப் பள்ளிகளில் 2012 ஆம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என அப்போதிருந்த அதிமுக அரசிடம் திமுக வலியுறுத்தியது.

மேலும் 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக வாக்குறுதி அளித்தது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினால் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரமாகி நல் வாழ்க்கையை அமைத்து கொள்ள முடியும்.

2021 ஆகஸ்டு இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து திமுக அரசின் 4 முழு பட்ஜெட்டிலும் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அதிலிருந்து, பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிதி ஒதுக்கி பணிநிரந்தரம் செய்ய முன்வரவில்லை.

இனி இடைக்கால பட்ஜெட் மட்டுமே திமுக அரசின் கையில் உள்ளது. இதிலாவது நிதி ஒதுக்கி பணி நிரந்தரம் செய்து காலமுறை சம்பளம் வழங்க அரசு முன்வர வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிகமாக பணிபுரிந்து வருவது வாழ்வாதாரத்தை பாதித்து வருகின்றது.

பள்ளிக் கல்வித்துறை

தற்போதுவரை சம்பளமாக 12 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. பணிநிரந்தரம் செய்தால் அரசின் சலுகைகள், பணப்பலன்கள் அனைத்தும் கிடைத்துவிடும் என்பதை வலியுறுத்தி ஜனவரி 8-ந்தேதியிலிருந்து போராட்டம் நடத்திய நிலையில் சம்பள உயர்வாக ரூ 2,500 வழங்கப்படும் எனவும், மே மாதத்திற்கு கருணைத் தொகை ரூ10 ஆயிரம் வழங்கப்படும் எனவும், தேர்வில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தரப்பில் மூன்று அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதற்கு அரசாணை வெளியிடவில்லை.

அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான தேத அறிவிக்கப்படுவதற்கு முன்பாக இந்த இடைக்கால பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181-இல் முதல்வர் ஸ்டாலின் சொன்னபடி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தற்போதுள்ள பத்தாயிரத்திற்கும் மேலான பகுதிநேர ஆசிரியர்களை காலமுறை சம்பளத்தில் பணிநிரந்தரம் செய்ய நிதி எவ்வளவு தேவைப்படும் என்பது ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும்.

ரூ 6,500 கோடி நிதியை ஒரே நாளில் மகளிருக்கு கிடைக்க செய்ய ஆணையிட்டு சாத்தியமாக்கிய முதல்வரால் அதுபோல பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரத்திற்கு நிதி வழங்க முதல்வர் மனது வைத்தால் போதும்" என்று தெரிவித்துள்ளார்.

PMIST: `ஆயிரம் கனவுகளின் விமானம்' - இந்தியா, ஆசியா புத்தக சாதனை நிகழ்வு!

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து `ஆயிரம் கனவுகளின் விமானம்' என்ற பிரமாண்டமான விண்வெளி சார்ந்த நிகழ்ச்சியை இந்தியா புத்தக சாதனை மற்... மேலும் பார்க்க

நெல்லை: பொருநை 9வது புத்தகத் திருவிழா தொடக்கம்; லட்சக்கணக்கான புத்தகங்களின் அணிவகுப்பு | Photo Album

பொருநை நெல்லை 9-வது புத்தகத் திருவிழா தொடக்கம்.! லட்சக்கணக்கான புத்தகங்களின் அணிவகுப்பு.!`படம் தொடங்கினப்ப கருணாநிதி படத்துலயே இல்ல!' - ‘பராசக்தி தடை’ புத்தகம் சொல்வது என்ன? மேலும் பார்க்க

`இதையெல்லாம் கணக்கில் கொண்டு திட்டமிட்டிருந்தால்...'- TNPSC நிர்வாகக் குளறுபடி குறித்து கல்வியாளர்!

தமிழ்நாடு முழுவதும் நேற்று (பிப்.8) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டது.தேர்வு ஒத்திவைப்பால் தேர்வர்க... மேலும் பார்க்க

நீலகிரி: தோட்ட தொழிலாளர் வம்சாவளி டு அரசு செலவில் மலேசியாவில் உயர்கல்வி! - அசத்தும் அரசு பள்ளி மாணவி

தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் புளியம்பாறை பகுதியைச் சேர்ந்தவர், மாணவி பிரேமா. தோட்ட தொழிலாளர்களான பரமேஸ்வரி - கணேஷ் மூர்த்தி தம்பதியரின் மகளான இவர், தொடக்க கல்வி முதலே படிப்ப... மேலும் பார்க்க

`கட்டடத்தை இடிக்க போறோம், வேற ஸ்கூல் பாருங்க' - திடீரென தெரிவித்த பள்ளி நிர்வாகம்! போராடும் பெற்றோர்

சென்னை அடையாறு காந்தி நகரில் இயங்கி வருகிறது குமார ராணி முத்தையா மெட்ரிகுலேஷன் பள்ளி. பனிரெண்டாவது வகுப்பு வரை இருக்கும் பள்ளியில் சில தினங்களுக்கு முன் அனைத்து பெற்றோரையும் நேரில் வரச் சொல்லியிருக்கி... மேலும் பார்க்க

தனுஷ்கோடி வந்தடைந்த நுகர்வோர் விழிப்புணர்வு பயணம்; நாடு முழுவதும் 36 ஆயிரம் கி.மீ. பயணிக்கிறது!

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சம்மேளனத்தின் சார்பில் நுகர்வோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்பாரத் யாத்ரா பயணம் நடைபெறுகிறது.புது டெல்லியில் இருந்து கடந்த டிசம்பர் 24ல் இப்பயணம் துவங்கியது. இ... மேலும் பார்க்க