செய்திகள் :

மகாராஷ்டிரா: தங்கையைக் கடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி; போராடிக் காப்பாற்றிய 11 வயது சிறுவன்!

post image

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஷிராலே அருகில் இருக்கும் உப்வாலே என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சங்கராம் பாட்டீல். இவருக்கு சிவம் (11) மற்றும் ஸ்வர்வாஞ்சலி (9) ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

அவர்களது வீடு வனப்பகுதி அருகில் இருக்கிறது. இரவில் சிறார்கள் இருவரும் 8.30 மணிக்குத் தங்களது வீட்டிலிருந்து அருகில் உள்ள வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் அப்படிச் சென்றபோது திடீரென அங்கு சிறுத்தைப்புலி ஒன்று வந்தது. அந்தச் சிறுத்தைப்புலி ஸ்வர்வாஞ்சலியின் கழுத்தைக் கடித்து இழுத்துச்செல்ல முயன்றது.

உடனே சுதாரித்துக்கொண்ட சிவம், தனது சகோதரி ஸ்வர்வாஞ்சலியின் கையைப் பிடித்து இழுத்தார். இதில் ஸ்வர்வாஞ்சலியின் கை வழுக்கிக்கொண்டது. சிவம் பிடியிலிருந்து கை நழுவியது. ஆனாலும் சுதாரித்துக்கொண்டு சிவம் தனது சகோதரியின் காலைப் பிடித்துக்கொண்டு கத்தினார்.

சிறுத்தைப்புலி
சிறுத்தைப்புலி

அவர்களின் சத்தத்தைக் கேட்டு சிவத்தின் தாயார் வீட்டிற்குள்ளிருந்து ஓடி வந்தார். பக்கத்து வீட்டுக்காரர்களும் அங்கு வந்தனர்.

அவர்களின் சத்தத்தைக் கேட்டு சிறுத்தைப்புலி பயத்தில் சிறுமியை விட்டுவிட்டு காட்டுக்குள் இருட்டில் தப்பிச் சென்றுவிட்டது. அதிர்ஷ்டவசமாக சிறுமி குளிருக்காக சுவெட்டர் மற்றும் தொப்பி அணிந்து இருந்தார். இதனால் சிறுத்தைப்புலியின் பல் சிறுமியின் கழுத்தில் ஆழமாகப் பதியவில்லை. ஆனாலும் கழுத்து, கை, முதுகு பகுதியில் சிறுமிக்குக் காயம் ஏற்பட்டது.

அவர் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிவம் துணிச்சலுடன் செயல்பட்டு இருக்காவிடில் சிறுமியை சிறுத்தைப்புலி கடித்து இழுத்து சென்று இருக்கும்.

அதோடு சிறுமி அணிந்திருந்த சுவெட்டர் மற்றும் தொப்பியும் சிறுமிக்குப் பாதுகாப்பு அரணாக இருந்தது. சிறுமியைக் காப்பாற்றிய சிறுவனை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர். ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமத்தில் 11 மாத குழந்தையை சிறுத்தைப்புலி கடித்து இழுத்து சென்றுவிட்டது.

``நிதிச் சிக்கல்களைக் காட்டிலும் மன அமைதி முக்கியம்" - ரூ.2.7 கோடி சம்பள வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!

இன்றைய கார்ப்பரேட் உலகில் மிக உயர்ந்த சம்பளம், பதவி உயர்வு என இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், தனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக ரூ. 2.7 கோடி (3,00,000... மேலும் பார்க்க

`இது கடவுள் கொடுத்த பொறுப்பு' - யாசகம் பெற்று குளிரிலிருந்து ஏழைகளை பாதுகாக்கும் யாசகர் ராஜு

வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. காஷ்மீரில் பனிப்பொழிவு இருக்கிறது. இதனால் மக்கள் மாலை நேரத்திலேயே வீட்டிற்குள் சென்று முடங்கிவிடுகின்றனர். காலை 10 மணிக்கு பிறகுதான் வெளியில் வருகின்றனர். வ... மேலும் பார்க்க

மும்பை: வெற்றி பெற்ற ஒரேமாதத்தில் அடியோடு பாஜக-வில் சேர்ந்த 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது படிப்படியாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் பா.ஜ.க தனித... மேலும் பார்க்க

குஜராத் : காந்தி நகர் சபர்மதி ஆற்றங்கரையோரம் 6 ஏக்கரில் புதிய நகரை உருவாக்கும் நடிகர் அமிதாப்பச்சன்!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் கடுமையான கடனில் சிக்கித்தவித்தார். ஆனால் இப்போது கடுமையாக உழைத்து கடனில் இருந்து மீண்டு பல்வேறு விதமான தொழிலில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப்பச்சன் அதிக... மேலும் பார்க்க