செய்திகள் :

மகாராஷ்டிரா: 55 லட்சம் விவசாயிகளின் விவசாயக் கடன் தள்ளுபடி; யார், யாருக்கு எவ்வளவு?

post image

கடந்த 2024ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று கூறி பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இருந்தது.

விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்து வந்தது. ஆனால் ஏற்கனவே மகாராஷ்டிரா அரசு கடுமையான கடன் சுமையில் இருக்கிறது.

லாட்கி பஹின் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500 வங்கிக்கணக்கில் வரவு வைக்கும் திட்டத்திற்கு அதிக அளவில் நிதி செலவிட வேண்டியிருக்கிறது.

2026–27ல் மாநிலத்தின் மொத்த பொதுக்கடன் ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் லாட்கி பஹின் யோஜனா போன்ற நலத் திட்டங்களுக்கு அதிக கடன் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது.

விவசாயிகள்
விவசாயிகள்

லாட்கி பஹின் யோஜனாவுக்கான, பயனாளிகள் எண்ணிக்கை 80 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் மாநில பட்ஜெட்டில் 2026-27 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.26,500 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய திருப்பமாக மாநில அரசு விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்து இருக்கிறது. மொத்தம் ரூ. 36,600 கோடி அளவுக்குகடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது 55.7 லட்சம் விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளது.

தற்போது சட்டமேலவை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜூன் 20ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகள் கடன் வாங்கிய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பட்னாவிஸ் அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம், செப்டம்பர் 30, 2025 வரை பயிர்க்கடன் நிலுவையில் உள்ள விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும், தங்கள் பயிர்க்கடனைத் தவறாமல் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு ரூ. 50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இப்போது, ​​ரூ. 2 லட்சம் வரை கடன் நிலுவையில் உள்ள விவசாயிகளின் முழு கடனையும் அரசு செலுத்தும். ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான கடன் உள்ள விவசாயிகள், தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்திய பின்னரே, மீதமுள்ள ரூ. 2 லட்சம் கடனை அரசு செலுத்தும்.

அதே சமயம், தங்கள் கடனைத் தவறாமல் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு ரூ. 50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்,” என்று ஓர் அதிகாரி கூறினார்.

அதேசமயம் ஜூன் மாதம் வரை கடனைத் தாமதப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் மாநில அரசைக் கண்டித்தன. கடந்த ஆண்டு, சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து மாநில அரசு இறுதி முடிவை எடுக்கும் என்று பட்னாவிஸின் அறிவிப்பு குறித்து விமர்சித்திருந்தார்.

இதற்கு முன்பு 2019ம் ஆண்டு ஆட்சியில் இருந்த மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசும் இதே போன்று ரூ.2 லட்சம் அளவுக்கு உள்ள விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்தது. அதற்கு முன்பு 2017ம் ஆண்டு பா.ஜ.க கூட்டணி அரசு 1.5 லட்சம் வரையிலான விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தது.

ஒவ்வொரு அரசும் ஆட்சிக்கு வரும்போது விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது. ஆனாலும் விவசாயிகளின் தற்கொலை மட்டும் மகாராஷ்டிராவில் குறையாமல் இருந்து கொண்டே இருக்கிறது.

கல்லூரியில் பூட்டியிருந்த அறையில் கிடந்த 2 சூட்கேஸ்களில் கரையான் அரித்த 1 கோடி ரூபாய் நோட்டுக்கள்!

கொல்கத்தாவின் மத்திய பகுதியில் செயல்படும் சுரேந்திரநாத் கல்லூரியில் பூட்டப்பட்டு இருந்த ஒரு அறையை திறந்து ஊழியர்கள் சுத்தப்படுத்தியபோது, உள்ளே இரண்டு சூட்கேஸ்கள் இருந்தது. அந்த சூட்கேஸ்களை திறந்து பார... மேலும் பார்க்க

இலவச மாம்பழ விருந்து: அமெரிக்கப் பூங்காவைத் திருவிழாக்கோலமாக்கிய அசல் இந்திய மாம்பழங்கள்!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பூங்கா ஒன்றில், இந்திய மாம்பழங்களுக்காக நடத்தப்பட்ட ஒரு பிரமாண்டமான "இலவச மாம்பழத் திருவிழா" அங்கிருந்த மக்களை ஒட்டுமொத்தமாகக் கவர்ந்து தற்போது இணையத்தில் பயங்கர வைரலாக... மேலும் பார்க்க

MacBook-க்காக இளைஞர் போட்ட ஸ்கெட்ச்; பணியில் சேர்ந்தவுடன் Uber நிறுவனத்துக்குக் காத்திருந்த ஷாக்!

ஊழியர்கள் வேலைக்கு வராமல் ஏமாற்றுவதை நாம் பார்த்திருப்போம், ஆனால் ஒரு லேப்டாப்பிற்காக ஒரு நபர் தனது அடையாளத்தையே ஒட்டுமொத்தமாக அழித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த இந்த விசித்திரச் சம்பவம் தற்போது பயங்கர வை... மேலும் பார்க்க

`சுஷ்மிதா என் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்தார்; அதுவொரு சிறப்பான உறவு'- மனம் திறந்த லலித் மோடி

நடிகை சுஷ்மிதா சென் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியைக் காதலிப்பதாகச் செய்தி வெளியானது. இருவரும் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்ற புகைப்படங்களை லலித் மோடி தனது சமூக... மேலும் பார்க்க

இன்ஸ்டா நட்பு; தன்பாலின உறவு - திருமணத்திற்கு மறுத்த பார்ட்னரை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர்

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள நாகபள்ளி என்ற இடத்தை சேர்ந்த சதீஷ்குமார்(30) என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி ... மேலும் பார்க்க