செய்திகள் :

`சுஷ்மிதா என் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்தார்; அதுவொரு சிறப்பான உறவு'- மனம் திறந்த லலித் மோடி

post image

நடிகை சுஷ்மிதா சென் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியைக் காதலிப்பதாகச் செய்தி வெளியானது. இருவரும் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்ற புகைப்படங்களை லலித் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். அதன் பிறகு அவர்களது காதல் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. அதே சமயம் பணத்திற்காகத்தான் சுஷ்மிதா சென் லலித் மோடியைக் காதலிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டனர். லலித் மோடி வேறு ஒரு பெண்ணை திருமணமும் செய்து கொண்டார்.

இந்த நிலையில், சுஷ்மிதா சென்னுடனான தனது காதல் குறித்து லலித் மோடி அளித்த பேட்டி ஒன்றில், விரிவாகப் பேசி இருக்கிறார். லலித் மோடி தனது பேட்டியில், ''சுஷ்மிதா சென் உடனான உறவு மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். எங்களது உறவு ஒருபோதும் பணத்தைப் பற்றியது அல்ல. சுஷ்மிதா ஒரு சுயமாக உருவான மற்றும் பணக்கார பெண். அவர் ஒருபோதும் பணத்தைத் தேடுவதில்லை.

சுஷ்மிதா மிகவும் அழகானவர், மிகவும் வசதி படைத்த பெண்மணி. இந்த உலகத்தில் எனக்குத் தெரிந்தவர்களை விட அவரிடம் அதிக வைரங்கள் இருக்கின்றன.

அனைத்து செலவையும் அவர்தான் செய்வார்

ஒரு முறை நான் அவருடன் வெளியே சென்றபோது எதற்கும் நான் பணம் செலுத்தவில்லை. எல்லாவற்றுக்கும் அவர்தான் பணம் கொடுத்தார். அவர் பணத்துக்காகப் பழகுபவர் என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் ஒரு வைரம். எனவே நான் வைரம் தோண்டுபவராக இருந்தேன். அவர் யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டார். எனவே அவரை அப்படி கூறுவது தவறு'' என்றார்.

நான் வெளியிடுவேன் என்று அவர் நினைக்கவில்லை

இருவரும் உறவில் இருப்பது குறித்த புகைப்படங்களை வெளியிட்டது குறித்து கூறுகையில், ''சுஷ்மிதா சென் முன்னிலையில் அவர் எதிர்பாராத நேரத்தில் நாங்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டேன். நான் வெளியிடுவேன் என்று அவர் நினைக்கவில்லை. நாங்கள் விமானத்தில் ஏதோ ஒன்றைப் பற்றி வாக்குவாதம் செய்துகொண்டிருந்தோம். அப்போது அவர், 'நீங்கள் இதை(புகைப்படங்கள்) பதிவிடப் போவதில்லை' என்று சொன்னார்.

நான் சிரித்துக்கொண்டே அவர் கண் முன்பு மொபைல் பொத்தானை அழுத்தி புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தேன். நாங்கள் தரையிறங்குவதற்குள், பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அதில் எந்தத் தவறும் இல்லை. அதை அகற்றுமாறு அவர் என்னிடம் ஒருபோதும் கேட்கவில்லை, நானும் அதைச் செய்ய ஒருபோதும் நினைக்கவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை. நான் இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்கிறேன் என்றால் அதற்கு சுஷ்மிதா சென் தான் காரணம். எனவே சுஷ்மிதா சென் எப்போதும் எனக்கு சிறப்புதான்.

நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு அவர்தான் காரணம். அவர் மிகவும் விசேஷமானவர். அந்தக் காலகட்டத்தில் அவர் என் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார். எங்களுக்கு இடையேயான தூரம் மிக அதிகமாக இருந்தது. அவருடைய தொழில் வாழ்க்கை இந்தியாவில் இருந்தது, என் வாழ்க்கை லண்டனில் இருந்தது. அது மிகவும் சிறப்பான ஓர் உறவாக இருந்தது. அவரைப் பற்றிய இனிமையான நினைவுகள் எனக்கு உண்டு. அவருக்கு நல்வாழ்த்துகளைத் தவிர வேறு எதையும் நான் கூற விரும்பவில்லை. அவர் ஓர் அற்புதமான பெண்மணி'' என்று குறிப்பிட்டார்.

இன்ஸ்டா நட்பு; தன்பாலின உறவு - திருமணத்திற்கு மறுத்த பார்ட்னரை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர்

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள நாகபள்ளி என்ற இடத்தை சேர்ந்த சதீஷ்குமார்(30) என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி ... மேலும் பார்க்க

"எதிர்க்கட்சியினருக்கு சிகிச்சை பெறக்கூட உரிமையில்லை" - திரிணாமுல் MP மீது தாக்குதல்; மம்தா கண்டனம்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி நேற்று தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள சோனர்பூர் என்ற இடத்திற்குச் சென்றார். தேர்தலில் அக்கட்சி சந்தித்த பெரும் தோல்வியைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

`சாக அனுமதி தாருங்கள், மனைவியின் சித்ரவதை தாங்கமுடியவில்லை'- குஜராத் வாலிபர் கலெக்டருக்கு கடிதம்

குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்தவர் கிரித் பட்டேல். இவருக்கு முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மூலம் குழந்தைகள் இருக்கின்றன. தற்போது இரண்டாவது மனைவிக்கும... மேலும் பார்க்க

ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டும் பெண்; ₹60,000 மாத வருமானம்! ஏன் இந்த முடிவு?

காலை 9 மணி லாகின், இரவு 9 மணி லாக் அவுட், நடுநடுவே காதைக் கிழிக்கும் மீட்டிங்குகள், நள்ளிரவில் வரும் 'ப்ரொடக்‌ஷன் இஷ்யூ' அழைப்புகள்... பல இளைஞர்களின் கனவாக இருக்கும் ஐடி வேலை, சிலருக்கு மன அழுத்தத்தின... மேலும் பார்க்க

`ஆபாச பேச்சு' - பிரபல இன்ஸ்டா தம்பதி கிருஷ், ஐஸ்வர்யா மீது சைபர் க்ரைமில் புகார்!

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பிரபலமடைந்த தம்பதி கிருஷ் - ஐஸ்வர்யா. இவர்களது சமூக வலைதள பக்கங்களை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதியின் சமூக வலைதள பக்கத்தில் ஆபாச ... மேலும் பார்க்க

7 நாடுகள், 23 துறைமுகங்கள் - உலகம் முழுக்க கொகைன் சப்ளை செய்துவிட்டு இந்தியா வந்து சிக்கிய கப்பல்!

குஜராத் மாநிலம் முந்த்ராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில் கடலோர பாதுகாப்பு படையினர் ரெய்டு நடத்தினர். இதில் 115 கிலோ கொகைன் போதைப்பொருள் இருந்தது க... மேலும் பார்க்க