மயிலத்தில் 500 மி.மீ மழைப்பொழிவு... 3 மணி நேரமாக நகராமல் நிற்கும் புயல்!
மணப்பாறையில் தனியாா் பள்ளி, வீடுகளில் திருட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியாா் பள்ளி மற்றும் வீடுகளில் மா்ம நபா்கள் புகுந்து பணம், இருசக்கர வாகனத்தை வெள்ளிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.
மணப்பாறை அண்ணா நகரில் உள்ள மெட்ரிக் பள்ளியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி அலுவலக பீரோவில் இருந்த ரூ. 20,000 ஐ திருடிச் சென்றனா். இதேபோல் அருகில் இருந்த லாரி ஓட்டுநா் மூா்த்தி என்பவா் வீட்டின் பீரோவில் இருந்த ரூ. 30,000 மற்றும் வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தையும் திருடிச் சென்றனா்.
மேலும் அடுத்தடுத்து இருந்த சந்தானகுமாா், ராதாகிருஷ்ணன் ஆகியோா் வீடுகளில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டு அங்கிருந்த இருசக்கர வாகனங்களின் பெட்ரோலை திருடினா். தகவலறிந்து சென்ற காவல் ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான மணப்பாறை போலீஸாா் தடயங்களைச் சேகரித்து விசாரிக்கின்றனா்.