செய்திகள் :

மதுபோதையில் ஒரே நாளில் மூவர் கல்லால் அடித்துக் கொலை - குமரியில் அதிர்ச்சி!

post image

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புதுகிராமம் பகுதியில் தனியார் பள்ளி கட்டுமானப் பணி நடந்து வருகிறது. மதுரை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் அங்கு வேலை செய்துவருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த சரவணகுமார்(35) என்பவருக்கும்,  மதுரையைச் சேர்ந்த தங்கபாண்டி (40) என்பவருக்கும் இடையே மதுபோதை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. பள்ளி கட்டடத்தில் தூங்கி கொண்டிருந்த சரவணகுமாரை சிமெண்ட் கல்லால் தலையில் தாக்கியுள்ளார் தங்கபாண்டி. இதில்  சரவணகுமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.  கொலை குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து தங்கபாண்டியை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட தமிழ் செல்வன்

இதுபோன்று ஈத்தாமொழி காவல்நிலைய எல்லையிலும் மதுபோதையில் கல்லால் தாக்கி இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் லிங்கசாமி(48). அதே பகுதியை சேர்ந்தவர் சிங்கம்(60). இருவரும் நண்பர்கள் நேற்று இரவு இருவரும் மது அருந்திய போது அவர்களுடன் சிலர் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராற்றில் உடன் இருந்த இருவர் லிங்கசாமி மற்றும் சிங்கத்தை கல்லால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்று காலை இருவரும் சடலமாக கிடந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு  தகவல் கொடுத்தனர்.

கொலை நடந்த இடத்தில் போலீஸ் விசாரணை

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்தக் கொலையைச் செய்தது தமிழ்செல்வன் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர். மேலும், இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுபோதையில் ஒரே நாளில் மூன்றுபேர் கல்லால் அடித்து கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர்: டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை!

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது: 48). இவர், மறவாபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் இரவு 10 மணியளவ... மேலும் பார்க்க

காரில் வெடித்த நாட்டு வெடிகுண்டு; நூலிழையில் உயிர் தப்பிய காதலி; உடல் கருகி பலியான காதலன்!

கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டத்தில் கல்லம்பெல்லா பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென வெடித்து, தீ பற்றியது. காரிலிருந்த கார் ஓட்டுநரும், பெண்ணும் உயிர் தப்பிய நிலையில்,... மேலும் பார்க்க

பேத்தி மீது அதிக பாசம் காட்டிய தாத்தா - பாட்டி; ஆத்திரத்தில் சிறுமியை கிணற்றில் வீசிக் கொன்ற அத்தை!

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் - செல்வி தம்பதிக்கு சாய்தீப்தி (5), சாரு நித்திகா (5) ஆகிய இரட்டை குழந்தைகள். விடுமுறை நாள்களில் ராமநாதபுரம் பசும்பொன் நகரில்உள்ள செல்வியின் தந்தை முத்து முருகன் வீட்டுக்கு ... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: ஹோட்டல் பெண் வரவேற்பாளரிடம் பாலியல் சீண்டல்... தலைமறைவான பயண முகவரைத் தேடும் போலீஸார்

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் நகரில் வசித்து வருபவர் ராஜா. இவர் ராமேஸ்வரத்தில் ஶ்ரீ பாலாஜி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பயண முகவராகவும... மேலும் பார்க்க

`அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை' - வருங்கால கணவனிடம் ரூ.1 கோடியை வாங்கி காதலனிடம் கொடுத்த மணமகள்

புனேயில் கடந்த 18-ம் தேதி ஷியா கோயல் என்ற பெண் தனது வருங்கால கணவர் கேதன் அகர்வாலை தனது காதலன் துணையோடு மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது... மேலும் பார்க்க

`வருங்கால கணவனை எப்படி கொலை செய்தேன்.!' - சம்பவம் நடந்த மலை உச்சிக்கு வந்து செய்து காட்டிய பெண்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த 18ம் தேதி அங்குள்ள லோஹாகட் மலைக்கோட்டையில் ரியஸ் எஸ்டேட் உரிமையாளர் கேதன் அகர்வால் என்பவரை அவரது வருங்கால மனைவி ஷியா கோயலும், அவரது காதலன் சேதன் செளதரியும் சேர்ந்து ... மேலும் பார்க்க