செய்திகள் :

``மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது..?" - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

post image

திருப்பரங்குன்றம் விவகாரம் தற்போது தமிழ்நாட்டின் பேசுபொருளாகியிருக்கிறது.

திருப்பரங்குன்ற மலையில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஆர்.டி.ஓ தகவலின் படி மலை உச்சியில் இருக்கும் சர்வே கல்லில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

இந்நிலையில் இந்து அமைப்பான இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், 'இந்த ஆண்டு திருப்பரங்குன்ற மலை உச்சியில் இருக்கும் தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும்' என மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் இருக்கும் தூணில் தீபமேற்ற உத்தரவிட்டிருந்தார்.

நூற்றாண்டு பாரம்பரிய வழக்கத்தை தொடரும் வகையிலும், 2014-ம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், சட்ட ஒழுங்கு சிக்கலைக் கருத்தில் கொண்டும் திருப்பரங்குன்ற கோயில் நிர்வாகம் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் வழக்கம் போல கார்த்திகை மகாதீபம் ஏற்றியது.

உச்சியில் இருக்கும் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்ய திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. தற்போது மதுரை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது.

இதற்கிடையில், மதுரை மற்றும் கோவை மாவட்டங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இதற்கு கோவை மற்றும் மதுரையில் போதுமான மக்கள் தொகை இல்லாததே காரணம் எனவும் மத்திய அரசு கூறியது.

மதுரை - மெட்ரோ
மதுரை - மெட்ரோ

மத்திய அரசின் இந்த நிராகரிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. அதே நேரம், பாஜக-வினர் 2026-ம் ஆண்டு தேர்தலில் பாஜக - அதிமுக ஆட்சி அமைத்தால் மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ திட்டத்தைத் கொண்டு வருவோம் எனக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள். மெட்ரோ இரயில், AIIMS, புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்! - இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கொங்கு அரசியலில் பரபரப்பு: திமுக அமைச்சரை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி! - காரணம் என்ன?

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கொங்கு திருப்பதி கோவில் அமைந்துள்ளது. வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட கோவில் அப்புறப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. இதனால... மேலும் பார்க்க

`ஆணுறை, கருத்தடை பொருள்களுக்கு வரி' - குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் சீன அரசு; என்ன காரணம்?

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான சீனாவில் குழந்தை பிறப்பை அதிகரிப்பதற்காக ஆணுறைகள் மற்றும் பிற கருத்தடைப் பொருட்களின் விலையை உயர்த்த அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிய... மேலும் பார்க்க

பகவத் கீதை: "மில்லியன் மக்களுக்கு உத்வேகமளிக்கும் நூல்" - ரஷ்யப் பிரதமர் புதினுக்கு மோடி பரிசு

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியதற்குப் பிறகு முதல் முறையாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருக்கிறார். உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பல்வேறு கட்ட முயற்... மேலும் பார்க்க